
புரிந்து கொள்வதற்கு
எதுவுமில்லை.
வேம்பின் சிறைப் பிடிப்பை மீறி
முற்றத்தின் நுனியில்
நகர்ந்து கொண்டிருக்கிறது
வெய்யில்.
இந்தக் குழந்தை
மூக்கில் நீர் வடிய
நமுத்த முறுக்கொன்றை
சப்புகிறது.
உருவாக்கப் பட்டிருந்த
சப்தங்கள் ஒடுங்கி
மெளனத்திற்கு இடம் கொடுக்கின்றன.
பாம்பின் நெளிதலைப்
போல காற்றில் பறக்கிறது
காகம்.
பிரக்ஞையற்ற மரக்கிளை
சாவாதானமாக
சன்னலை உரசுகிறது.
அவையவை
அவ்வாறே நடக்கின்றன.
இதில்
புரிந்து கொள்வதற்கு
எதுவுமில்லை.
* இக்கவிதை நவம்பர்'2006 மாத இதழில் வெளிவந்திருக்கிறது.
* பெரும்பாலனவற்றினை அறிவு வரைக்கும் எடுத்துச் சென்று புரியவில்லை என புலம்பியிருக்கிறேன். இது தேவையில்லாதது என்பது என் எண்ணம்.
* பல விஷயங்களை நம் பார்வையோடு நிறுத்தி ரஸித்தால் போதும், புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் எழுதிய கவிதை.
* கமல் மாதிரி.."ஒண்ண பார்த்தா அனுபவிக்கணும்..ஆராயக்கூடாது" :)
13 எதிர் சப்தங்கள்:
Good one Mani...
Simple words..
kaatchikal thulliyamaka irukkinrana.
-Prabhu
இப்படியெல்லாம் எழுதிட்டா...
உன்னை கவிஞர்ன்னு சொல்லணுமா?
நன்றி பிரபு...
அட அனானி...
நான் எப்பய்யா அப்படியெல்லாம் சொல்லச் சொன்னேன்?
To anony on behalf of mani
என் கவிதைகளை கவிதைகள்
என்று யார் சொன்னது?
என் கவிதைகள் கவிதைகள்
அல்ல.
என் கவிதைகள்
கவிதைகள் அல்ல
என்று தெரிந்துவிட்டதனால்
நாம் இருவரும் சேர்ந்து
பேசத் தொடங்கலாம்
நன்றி கணேஷ். :)
நாம் இருவரும் சேர்ந்து
பேசத் தொடங்கலாம்......
கவிதைகள் பற்றி.
என்று முடியும். :)
//
இதில்
புரிந்து கொள்வதற்கு
எதுவுமில்லை.
//
இந்த வரிகள் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டன!
ஆம்!
பேசத் தொடங்குவோம்!
இன்றே!
இப்பொழுதே!
எதைப்பற்றி?
அதைக்
கண்டுபிடிக்கத்தான்
பேசத் தொடங்குவோம்!
இன்றே!
இப்பொழுதே!
புரிந்து கொள்வதற்கு
எதுவுமில்லை
- என்ற வரிகள் இருமுறை வந்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. முக்கியமாக - ஆரம்பத்தில் அது தேவையில்லை. கடைசியில்கூட, "இதில்" என்பதை எடுத்துவிட்டு, புரிந்து கொள்வதற்கு / எதுவுமில்லை என்று இருந்திருந்தால் செறிவு கூடியிருக்கும்.
"வேம்பின் சிறைப்பிடிப்பை மீறி" என்ற வரியும், "பாம்பின் நெளிதலைப் போல / காற்றில் பறக்கிறது / காகம்" என்ற வரியும் பிடித்திருந்தன. - பி.கே. சிவகுமார்
கவிதை நன்றாக இருந்தது.
beautiful kavithai mani! enakkellam ippadi thona mattenguthe..
நல்ல கவிதை மணி.
PKS சொல்வதும் சரி என்றே படுகிறது.
Nalla kavithai.thodarnthu ezuthungal Mani
HEY
VERY NICE
XLENT...
KEEP POSTING
SURYA
DUBAI
Post a Comment