
காமத்தில் திளைத்துப் பெருத்த
மார்பு நோக்கி
நிறுத்தப்படுகிறது பார்வை.
கறையேறிய இருபற்கள் வெளித்தள்ளி
மிருகவெறி
இரத்தச்சிவப்பேறிய கண்கள்.
நகம் முளைத்த கரங்களால்
பருத்த உறுப்பை
தடவிச் செல்கிறாள்
அவனோடு.
காமநெடி
மது போதை
ஒளியின் பாய்ச்சல் குறைக்கப்பட்டு
ஒலியேற்றப்பட்ட அறையில்
தடவல்
கடித்தல்
கதறல்.
பிதுங்கிய மார்புச் சதையில்
கசிந்த துளி இரத்தம்
அவனது பல்லில் படிந்து கிடக்கிறது
களியாட்ட வீச்சில்
ரோமங்கள் பிடுங்கியெறியப்பட்டு
சதைப் பிண்டமாய் திரிகின்றாள்.
காமநெடி
மது போதை
இரவின் இறுதியில்
மனித உரு பெற்று ஆடை
திருத்தும் இவளுக்கு
அடுத்த சனிக்கிழமையின் இரவில்
வேறொருவனும்
அவனுக்கு இன்னொருத்தியும்
கிடைக்கக் கூடும்.
19 எதிர் சப்தங்கள்:
படித்தேன் வரிகளை
விடியவில்லையே அர்த்தம்
உட்கருத்தென்ன நன்பரே,
வெறுப்பான உம் கவிதைக்கு?
பாடமொன் றெதிர்பார்த்தேன், கடைசியில்
நேரம்தான் வீண்!
மாசிலா,
புரியவில்லையா? என்னங்க பண்ண முடியும்?
உட்கருத்தா? நான் என்னங்க சமூகத்த திருத்தவா கவிதை எழுதுறேன்? இல்ல...அட்வைஸ் பண்ணினாதான் கேட்பாங்களா? அதுக்கு வயசும் போதாது...அனுபவமும் போதாது.
கவிதையில் வெறுப்பெல்லாம் எதுவுமில்லை.
பின்னூட்டமே வரவில்லை. 'நல்ல'வர்கள் வரமாட்டார்கள் :) கண்டுகொள்ள வேண்டாம்
again one! ;)
மிக நல்ல கவிதை.
எனக்கென்னவோ, காட்சி முழுவதுமாய் கவிதைக்குள் பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது.
//இரவின் இறுதியில்
மனித உரு பெற்று ஆடை
திருத்தும் இவளுக்கு
அடுத்த சனிக்கிழமையின் இரவில்
வேறொருவனும்
அவனுக்கு இன்னொருத்தியும்
கிடைக்கக் கூடும். //
இவை எனக்குப் பிடித்த வரிகள் . . .
//இரவின் இறுதியில்
மனித உரு பெற்று ஆடை
திருத்தும் இவளுக்கு
அடுத்த சனிக்கிழமையின் இரவில்
வேறொருவனும்
அவனுக்கு இன்னொருத்தியும்
கிடைக்கக் கூடும்.//
நன்றாக உள்ளது வரிகள்!
கவிதையும்தான்.
//அடுத்த சனிக்கிழமையின் இரவில்
வேறொருவனும்
அவனுக்கு இன்னொருத்தியும்
கிடைக்கக் கூடும்.//
நச்சுன்னு ஒரு மெசேஜ்!
//புரியவில்லையா? என்னங்க பண்ண முடியும்?
//
இப்படி எழுதினா எப்படி எல்லாருக்கும் புரியும்?
எல்லோருக்கும் புரியுறா மாதிரி ஒரு கவிதை எடுத்து வுடு நைனா!
நல்ல முயற்சி. பெருத்த மார்பு, பருத்த உறுப்பு, பிதுங்கிய மார்புச் சதை என்பவை கவிதைக்கு பின் நவீனத்துவ அழகைச் சேர்க்கின்றன. இன்னமும் முலைக்காம்பு, பிருஷ்டம், யோனி போன்ற வார்த்தைகளைப் போட்டு எழுதுதியிருக்கலாம். தொடர்ந்து இதுபோல கவிதைகள் தரமுயலுங்கள்.
//முலைக்காம்பு, பிருஷ்டம், யோனி போன்ற வார்த்தைகளைப் போட்டு எழுதுதியிருக்கலாம். தொடர்ந்து இதுபோல கவிதைகள் தரமுயலுங்கள். //
குத்துன்னா குத்து....இதான்யா குத்து :)
மணி என்ன ஆச்சு???
சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கப்பா.......
அய்யன்ட சொல்லவா?
புதுமை விரும்பி,
ஒரு வருடத்திற்கு முன்பு எழுதினேன். சில சொற்களின் மாற்றங்களுடன் இந்த வடிவம் இருக்கிறது. நிறைய முறை நானே படித்ததால், கவிதையில் மாற்றம் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதற்கான இடத்தை கவிதை கொடுத்திருக்கலாம்.
ஆவி,
எழுதணும். புளியமரம், புங்கை மரம்ன்னு புரியற மாதிரி. :) நீங்களும் சந்தோஷமாகிற மாதிரி.
நன்றி தம்பி,
கவனித்துப் பார்த்தால் அந்த வரிகள் மட்டும்தான் கவிதையின் ஆரம்பம். :)
மனசு,
இப்படி இருந்தாதான் erotic ஆ எழுத முடியும். கல்யாணம் ஆனால் Romantic வந்துடும்ன்னு நினைக்கிறேன். ;)உங்க அக்கறைக்கு நன்றி. வீட்டில் போட்டுக்கொடுக்க வேண்டாம்.
அனானிகளுக்கும் நன்றிகள்.
மற்றபடி இக்கவிதை குறித்து சிறு குறிப்பு. மனசு அவர்களுக்கு சொன்னது போல இந்தச் செய்தியை, Romantic அல்லது Erotic ஆக எழுத இயலும். நான் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுத்தேன்.
காமம் மிருகத்தன்மையுடன் ஊடுருவிக்கிடக்கிறது என்பதனைச் சொல்ல எனக்கு இந்தச் சொற்களளும், இந்த வடிவமும் தேவைப்பட்டிருக்கின்றன.
இந்தக் கவிதைக்காக காமரசம் சொட்டும் இணையத்தளங்களுக்கான தொடுப்புகளை எனக்குத் தரவேண்டியதில்லை என அனானி அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்.
என் காம உணர்வுகளை தூண்டிவிடத் துடிக்கும் தங்களின் அன்புக்கு நன்றி. தேவைப்படுமெனில் இணையத்தில் என்னால் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள இயலும்.
nothing to say!!:-)
Last paragraph is too good....to the point...anyway i feel u could have avoided some repetitive descriptions...
மணி,
ரொமாண்டிக்கோ, எரோட்டிக்கோ.. உருப்படியாகச் சொல்ல எதுவும் இல்லாமல், அண்ணி கதை (sorry to quote this!) மாதிரி ஆகிவிட்டது இந்தக் கவிதை.
கவிதை ரசனை பற்றிய உங்கள் பதிவில் மாதுமை சிவசுப்ரமணியத்தின் கவிதை ஏற்படுத்திய பாதிப்பைக் கூட இந்தக் கவிதை ஏற்படுத்தவில்லை.
கிட்டத் தட்ட இதே போல், புணர்ச்சியைப் பற்றிய, ஆனால் மென்மையான, இந்தக் கவிதையின் சுட்டியை ஏனோ இங்கே பின்னூட்டத்தில் பதிவு செய்யத் தோன்றியது.
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!
பொன்ஸ்,
தங்களுக்கு மட்டும் தனியாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
ஆனால் தேவையில்லாமல் திரு.குப்புசாமி அவர்களின் கதையைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முதலில் ஒப்புமைப் படுத்தலைக் கைவிடுங்கள்.
//மாதுமை சுப்பிரமணியத்தின் கவிதை ஏற்படுத்திய பாதிப்பைக் 'கூட'//(அதென்ன அத்தனை இளக்காரம்? அக்கவிதை குறித்து) அது காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கவிதை. (அதற்காக மட்டுமே அக்கவிதை உயர்ந்த கவிதை என்று சொல்லவில்லை. just like that.. அவ்வளவுதானே உங்கள் எண்ணம்?)
தங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உருப்படியில்லாததாகிவிடுமா என்ன?
படிக்கும் அத்தனை பேருக்கும் உருப்படியாக அமைய கலைச்சேவை ஒன்றும் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் படைப்பு எனக்கு முதலில் திருப்தியளிக்க வேண்டும். இக்கவிதை தந்திருக்கிறது.
உருப்படியோ உருப்படியில்லையோ....எனக்கு அது குறித்தான கவலையில்லை. பொது இடத்தில் வைத்து உருப்படியான கவிதையா இல்லையா என்று விவாத அரங்கமும் நான் நடத்தவில்லை.
தங்களுக்கு பிடிக்கவில்லை.ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. அதனை மட்டும் சொல்லி இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
தேவையில்லாமல் ஒரு கவிதையுடன், இரண்டு படைப்புகளை ஒப்புமைப் படுத்தி, மற்றவற்றையும் மட்டம் தட்டிய தங்களின் 'அறிவுஜீவி'த் தனத்திற்குதான் சற்றே காட்டமான பதில்.
(தங்களைப் போன்றே....sorry to write like this....என்றும் எழுதிக் கொள்கிறேன்)
// தங்களின் 'அறிவுஜீவி'த் தனத்திற்குதான் சற்றே காட்டமான பதில்.//
இது தவிர்த்திருக்கக்கூடிய தேவையற்ற விஷயமாய்ப் படுகிறது.படைப்பவர் போக்கு / சுதந்திரம் போலவே படிப்பவர் போக்கும் / சுதந்திரமும் மறுக்கமுடியாத விஷயம்.
அதை அங்கீகரிப்பதோ ,உடன்படாததோ படைப்பை "மட்டுமே" முன்னிருத்திச் செய்வதே சிரியான போக்காகப்படுகிறது.
இரசிக்க வைத்தமைக்கு நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment