Aug 25, 2006

சில உவ்வே படங்கள்!!!

இந்தப் படங்களைப் பார்த்து வா.மணிகண்டன் இப்படித்தான் என முடிவு செய்யவேண்டாம். காலத்தின் கட்டாயமாகிறது. நடிகைகளின் படத்தையும் என் படத்தையும் பார்த்த நண்பணோடு பணிபுரியும் பெண்கள், "பையன் முகத்தைப் பார்த்தால் நல்லா இருக்கான். கேரக்டர் சரியில்லையோ" என்றார்களாம். :)

இது என்னுடைய 101வது பதிவு. இந்தப் பெயரில் மட்டுமே, இந்தப் பதிவில் மட்டுமே எழுதுகிறேன். நண்பரொருவர் கேட்டது போல் என் கருத்துக்களைச் சொல்ல எனக்கு வேறு பெயரோ, முகமோ தேவையில்லை.(இதுக்கு எல்லாம் சர்டிபிகேட் கொடுக்க வேண்டியிருக்குப்பா!)

100வது பதிவே தனிப்பதிவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால் நேற்று எழுதிய பதிவு முக்கியமானதாகத் தோன்றியதால் தனிப்பதிவிட இயலவில்லை. கடந்த நூறு பதிவுகளில், என் எழுத்திலும், பார்வையிலும் நல்ல மாற்றங்களை நான் உணர்கிறேன்.(மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.) நன்றி வலையுலகமே. (சுஜாதா சார், இது கூட வலைப்பதிவுகளின் பயன்தான். யாராவது எடுத்துச் சொல்லுங்க!)

குளிர்ச்சியாகப் படங்கள் போடுவதாக சொல்லி இருந்தாலும், பச்சையாக இருப்பதனைத் தவிர்க்க இயலவில்லை. கோபிச் செட்டிபாளையத்தை சுற்றி இருக்கும் பகுதிகளின் படங்கள் இவை.
Photobucket - Video and Image Hosting

கோபியின் பழைய பெயர் வீரபாண்டி கிராமம் என்பதாகும்.

ஊரின் சிறப்பம்சமே இந்தப் பசுமைதான். பவானி ஆறு இப்பகுதிக்கான முக்கிய பாசன ஆதாரம். இந்த ஆறு பல கால்வாய்களாக வெட்டப்பட்டு பல பகுதிகளுக்கும் பாசனம் அளிக்கின்றன. தொலைவில் தெரியும் மலைப் பகுதிகள் கர்நாடகாவை, தமிழகத்தில் இருந்து பிரிக்கின்றன. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் "வீரப்பன் மலை".
Photobucket - Video and Image Hosting
பெரும்பாலும் கோபியின் அனைத்துப் பகுதிகளும் திரைப்படங்களில் முகம் காட்டி இருக்கக் கூடும். கொடிவேரி மிகப் பிரசித்தம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவின் இல்லம் இந்த அணையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Photobucket - Video and Image Hosting
இப்பகுதியின் முக்கியத்திருவிழா பாரியூர்(கொண்டத்துக் காளியம்மன்) குண்டம் திருவிழா. ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இளவட்டங்களுக்கு "முத்துப் பல்லக்கு". அம்மனின் ஊர்வலமும் இருக்கும். பாவடை தாவணி, சுடிதார் தேவதைகளின் ஊர்வலமும் இருக்கும்.

கோபியைச் சுற்றிலும் இருக்கும் பாரியூர், பச்சைமலை, பவளமலை, கொடிவேரி மற்றும் குண்டேறிப் பள்ளம் போன்றவை இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள். ஒரு முறையாவது காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
Photobucket - Video and Image Hosting
வாய்க்கால் பாசனம் தவிர்த்து, கிணற்றுப் பாசனம் பெறும் நிலப் பரப்புகளும் உண்டு.(தோட்டம்). நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. வாழையும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
நிறைய சாதிகள் இருப்பினும் கவுண்டர்கள்(கொங்கு வெள்ளாளர்) அதிகம் வாழும் பகுதி. இவர்கள் தவிர்த்து நரம்புகட்டி கவுண்டர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், முதலியார்கள் ஆகியோரும் கணிசமாக உண்டு. எளிமையான வாழ்க்கை முறை என்றாலும், கரைவழிந்து நீர் ஓடும் வளமையின் காரணமாக கொஞ்சம் "பந்தா பார்ட்டிகள்".
Photobucket - Video and Image Hosting
முக்கியமான பண்டிகை மாரியம்மன் பண்டிகை.(மாரி=மழை). கம்பம் வெட்டுதல், கம்பம் குதித்தல், அம்மை அழைத்தல், மா விளக்கு எடுத்தல்,அக்கினிக் கும்பம் எடுத்தல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டம், மறுபூசை, பண்டாரன் வீடு சேர்த்தல் என ஏழு நாள் திருவிழா.
Photobucket - Video and Image Hosting
இந்தப் புகைப் படங்களை நண்பர் பிரதீப் எனக்கு அனுப்பி வைத்தார். (இவரைப் பற்றி ஏற்கனவே கொங்கு நாட்டு காதல் கதைங்கண்ணா என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.)

இன்றைய டிஸ்கி: அந்த "உவ்வே" சந்தோஷமாகச் சொல்ல வேண்டிய உவ்வே. வாந்தியெடுக்கும் உவ்வே அல்ல. ;)

26 எதிர் சப்தங்கள்:

நிர்மல் said...

கோவில் திருவிழா படமில்லியா

பெத்த ராயுடு said...

Wow.
படங்களும், கட்டுரையும் அருமை.

பட்டணத்து ராசா said...

ஒரு முறை கோபி வந்திருக்கேன் மணி, நண்பரின் அத்தை வீடு மலை அடிவாரத்துல (கோபியேவா? பக்கத்து ஊரா ஞாபகம் இல்லை). இது தான் குஷ்பு ஆடுன மரக்கிளை. இது தான் குஷ்பு விடு ஒரு நாள் முழ்க்க பையன் பெருமையா ஊர சுத்தி காட்டினான் :-)

கோவி.கண்ணன் [GK] said...

முதல் ஆளாக ஆர்வக் கோளாராக பார்த்து ஏமாந்து போனாலும்...

...ம் தலைப்பும் டிஸ்கியும்

'அந்த "உவ்வே" சந்தோஷமாகச் சொல்ல வேண்டிய உவ்வே. வாந்தியெடுக்கும் உவ்வே அல்ல. ;) '

காலாத்தின் கட்டயம் !!! நீங்கள் மட்டும் விதிவிலக்கா !

:))

மணியன் said...

அழகான கோபிக் காட்சிகளை காட்டியதற்கு நன்றி. எனது அத்தை அங்கிருந்தபோது கழித்த இளவயது நாட்களின் நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

உவ்வே,உவ்வேவிற்கு பதிலாக வாவ்,வாவ் என்று போட்டிருக்கலாம் :)

குழலி / Kuzhali said...

//கோவில் திருவிழா படமில்லியா//
அது....

அருட்பெருங்கோ said...

எல்லாப் படமும் நல்லா பச்சையா... இல்ல இல்ல... பசுமையா இருக்கு...

செந்தில் குமரன் said...

கோபி பொள்ளாச்சி எல்லாம் நல்ல பசுமையான ஏரியாங்க. போட்டோ எல்லாம் நல்லா இருக்கு.

Anonymous said...

as a chennaite, iam exteremely happy to see the monumental work particularly the natural photographs of "Gopichetipalayam". good efforts taken. looking forward to see much more greener parts of the earth coupled with your beautiful wordings.

வசந்த் said...

நமக்கும் பவானி பக்கம் தாங்க... ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க நம்ம ஊரு படம் எல்லாம் பார்த்து..

ஆவி அம்மணி said...

அருமையான உவ்வே படங்கள்.

அந்த ஊர் புளியமரங்களையும் படம் பிடித்து போட்டிருக்கலாம் எங்கள் கண்களுக்கும் குளிர்ச்சியாக

ILA(a)இளா said...

நம்ம ஊருல "பச்சை"ய நல்லா அள்ளி தெளிச்சு இருக்கார் ஆண்டவன்(நாம பவானி பக்கமுங்கோ)

Anonymous said...

really superb to see gobi in blogs

SP.VR.சுப்பையா said...

பெற்ற தாயையும், பிறந்த பகுதியையும் மறக்க முடியுமா?

அதை உங்களுடைய 100 வது பதிவில் நினைவுகூர்ந்தது நன்றே மணிகண்டன்!

துளசி கோபால் said...

தலைப்பைப் பார்த்துட்டு இந்தப் பக்கம் வரவே பயமா இருந்துச்சு.

10 பின்னூட்டம் காமிக்குதேன்னு தயங்கித் தயங்கி வந்தென்.

அட்டகாசமான படங்கள்.

நல்லா இருக்கு.

அதென்ன 101வது பதிவா?

வாழ்த்து(க்)கள்.

ENNAR said...

பசுமை நிறைந்த பகுதி எங்கெங்குக் காணிணும் பசுமை நல்ல காட்சி

வெற்றி said...

மணிகண்டன்,
முதலில் உங்களின் 101வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

படங்கள் மிகவும் அருமை. பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் இந்த இடங்களில் இளம் தென்றல் வீசும் போது நடந்து திரிய வேண்டும் போலுள்ளது.

தம்பி said...

கொடிவேறிக்கு ஒரே முறை நண்பர்களுடன் வந்திருக்கிறேன் மிக
அருமையான சுற்றுலா இடம்.

பக்கத்திலயே மீன்வறுவல் செஞ்சு விப்பாங்க செம டேஸ்டுங்க அது!

oosi said...

IRTT காலத்தை நினைவு படுத்துகறீர்கள் ...ஹும்ம்....

podakkudian said...

மிக அருமையான படங்கலும் விமர்சனமும் தொடர வாழ்த்துக்கள்

Raj said...

Good one.
I am also from Gobi, you missed drinking beer and fish fry at kodiveri. Also the lorry tube ride in the canals :-) Raj

குமரன் (Kumaran) said...

மணிகண்டன். இப்படி கடுப்படிச்சுட்டீஙளே. தலைப்பைப் பாத்துட்டு பதிவைப் படிக்காம விட்டுட்டேன். திரும்பத் திரும்ப தமிழ்மணத்துல வந்ததால உள்ளே வந்து பார்த்தேன். நல்ல தலைப்பா போட்டிருக்ககூடாது. இன்னும் முந்தியே வந்திருபேனே.

உங்க ஊர் பக்கம் எல்லாம் எப்படிங்க அம்புட்டுப் பசுமை? மொதொ மொதொ பவானிக்கு ஒரு நண்பன் வீட்டுக்கு 1993ல போனப்ப பொறாமையா இருந்தது.

101வது பதிவிற்கு வாழ்த்துகள். சுருக்கமா சொல்லிட்டுப் போயிட்டீங்க.

வேந்தன் said...

good

Johan-Paris said...

மணிகண்டன்!
ஒங்க ஊர் இவ்வளவு பசுமையா??படங்கள்;தொகுப்புரை பிரமாதம்; இனிமேல் வந்தால் கட்டாயம் அந்தப்பக்கம் வரமுயல்கிறேன். நாகரீகக் கறைபடாது இறைவன் இந்த மண்ணை இப்படியே!!! காக்கட்டும்.
இந்தப் பவானியில் இருந்து பாலமுருகன் எனும் வழக்கறிஞர் "சோளகர் தொட்டி" எனும் கதை எழுதியுள்ளார், வீரப்பன் வேட்டையால் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் பற்றியது.மிக மனவேதனை தரும் பல உண்மைச் சம்பவங்களை விபரிப்பது.கிடைத்தால் படிக்கவும்.
யோகன் பாரிஸ்

anbuelango from sathayamangalam said...

அண்ணே
என் சொந்த ஊரை பத்தி உங்க கட்டுரை நல்லா இருந்தது

Anonymous said...

அப்படியே பண்ணாரி கோயிலைப் பத்தியும் எழுதுங்கள்