இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்றும் ஒரு உந்துதல் இருக்கிறது.
தற்சமயம் மென்பொருள் ஒன்று கற்றுக் கொண்டிருக்கிறேன். நிறுவனத்தில் பணி முடிந்த பிறகு பயிற்சி, அதன் பின்னர் இரவு உணவு முடித்து வீடு செல்ல இரவு 11 மணி ஆகிவிடுகிறது. ஹைதராபாத் நகரில் முக்கியமான பகுதிகள் யாவும் தில்ஷ¤க்நகர்-பட்டான்சேரு என்னும் ஒற்றைச் சாலையில் இணைக்கப்பட்டு விடுகின்றன. எஸ்.ஆர் நகரும் மியாப்பூரும் கூட அந்தச் சாலையிலேயே வருகின்றன. பயிற்சி நிறுவனம் எஸ்.ஆர் நகரிலும், வீடு மியாப்பூரிலும் இருக்கின்றன. இரவில் நேரம் ஆகிவிடுவதால் ஷேர் ஆட்டோ பிடித்து வந்து விடுவேன். பெரும்பாலான ஆட்டோக் காரர்கள் இடையில் ஹைதர் நகர் என்னும் இடத்தோடு நின்றுவிடுவார்கள். அதன் பின்னர் வேறு ஆட்டோவில் மூன்று கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும்.
நேற்று முன்தினம் நன்கு மழை பெய்தது. ஹைதர் நகரை அடையும் போது மழை நின்று விட்டிருந்தது. ஆனால் மணி 11.30ஐ தாண்டிவிட்டது. மூன்று கிலோமீட்டர் நடப்பது எனக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால் இந்தச் சாலை கொஞ்சம் பயத்தைத் தந்தது. இந்த மூன்று கிலோ மீட்டர்களிலும் குடியிருப்பு எதுவுமில்லை. கிட்டத்தட்ட சிறிய வனப் பகுதி. சாலையின் ஓரத்தில் அரவாணிகளும் பெண்களும் நின்று கொண்டிருப்பார்கள். லாரி டிரைவர்களும், இரு சக்கர வாகனத்தில் வரும் ஆண்களும் சிறுநீர் கழிப்பது போல நின்று கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள்ளாக பேரம் நடக்கும். பின்னர் புதர்களுக்குள் செல்வார்கள். தினமும் ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ வரும் போது வலது பக்கமாக, இந்த நிகழ்வுகளை கவனிப்பதற்காகவே இடம் பிடிப்பேன்.

இவை குறித்து எனக்கு முன்னமே தெரியும். ஓரிரு மாதங்களுக்கு முன்பாக இங்கு பணிபுரிந்துவிட்டு, இப்போது அரபு நாடுகளுக்கு சென்று விட்ட நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். சொல்லியது மட்டுமல்லாமல் என்ன நடக்கிறது என்பதனை பார்த்து வரலாம் என முடிவு செய்து கிளம்பினோம். கூட ஒருவர் இருக்கிறார் என்ற போதும் பயம் அதிகமாகவே இருந்தது. "சார், திருபிடலாம்" என பதட்டமான குரலில் வற்புறுத்திக் கொண்டே வந்தேன். இருவருக்கும் தெலுங்கும் தெரியாது, இந்தியும் தெரியாது.
கொஞ்சம் தூரம் நகர்ந்தவுடன் வாகனங்களின் விளக்கொளியில் புதர் அசைவது தெரிந்தது. இருவரில் யார் அசைவுகளைப் பார்த்தாலும் மற்றவருக்கு சுட்டிக் காட்டுவது என பயம் குறைய ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச தூரத்திற்குள்ளாக கைதட்டும் ஓசை கேட்டது. அது எங்களுக்குத் தான். மூன்று பேர். எங்களைப் பார்த்து ஏதோ சொன்னார்கள். நண்பருக்கும் பயம் வந்திருக்கக் கூடும். கிளம்பி விடுவது நல்லது என்றார். கூடுதல் வேகத்துடன் நடக்க ஆரம்பித்தோம். தூரத்தில் கைதட்டும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.
இந்தச் சாலையில் தனியாகச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளாக எப்படியோ வந்து விட்டது. ஆனால் இன்று அது உகந்தது அல்ல என்பது தெரியும். மாத செலவுகளுக்காக இன்றுதான் பணம் எடுத்து வந்திருந்தேன். பஸ் அல்லது ஆட்டோ எதுவும் வருவதாக இல்லை. சில இரு சக்கர வாகனக்காரர்களும் நிற்காமல் சென்றது என்னை ஒரு வழியாக்கிவிட்டது.
நடப்பது தவிர வேறு வழியில்லை. ஒன்றரைக் கிலோமீட்டர்கள் கடந்து விட்டேன். மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. அடுத்த கணம் பயம் தொற்ற ஆரம்பித்தது. இரு ஆண்களும் மூன்று பெண்களுமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன், ஒருத்தியின் மார்பின் மீது கை வைக்க அவர்களுக்குள் சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நான் சிறிது தூரம் நடப்பதற்குள்ளாக பேச்சு வார்த்தை முறிவடைந்து விட்டது போல இருந்தது. வண்டியைக் கிளப்பினார்கள். பெண்கள் கத்தினார்கள். அநேகமாக சாபமாக இருக்கக் கூடும். அதுவா முக்கியம், இவ்விடத்தைக் கடந்தாக வேண்டும்.
ஒருவள் என்னைப் பார்த்திருக்கக் கூடும். கைதட்டினாள். கிட்டத்தட்ட ஓட ஆரம்பித்துவிட்டேன். ஒன்றரைக் கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். ஒருகையை சட்டை பாக்கெட்டின் மீதாக வைத்துக் கொண்டு ஓடுகிறேன். மழை ஈரத்தில் வழுக்கும் சாலை என் பிரச்சினையை அதிகப் படுத்தியது. அவர்களும் பின்னால் துரத்துவது தெளிவாகத் தெரிகிறது. திரும்பிப் பார்க்கவும் பயம். வழுக்கி விழுந்தால் மாட்டிக் கொள்ளக் கூடும். வேகமாகவும் ஓட வேண்டும் அதே சமயம் கவனமாகவும். ஒருத்தி கத்த ஆரம்பிக்க மற்றவர்கள் சிரித்தார்கள்.
திடீரென வேறு இரண்டு பேர் புதர்களுக்குள்ளாக இருந்து, என் முன்னால் வந்து நின்றார்கள். ஒருத்தி தனது முந்தானையை விலக்கினாள். மழையில் நனைந்திருந்து, சோடியம் விளக்கொளியில் தெளிவாகத் தெரிந்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. நின்று விடுவதுதான் உசிதம். ஐந்து பேரும் சூழ்ந்து கொண்டார்கள். தெலுங்கு, உருது, ஹிந்தியில் பேசினார்கள். நான் என்ன பேசினேன் என்று தெரியவில்லை. திடீரென்று ஒருத்தி என் செல் போனையும், பர்ஸையும் பிடுங்கிக் கொண்டாள்.
"சாரு டப்புலு ஈச்சாரு, நுவ்வு சந்தோஷம் இவ்வு" என்று அரைகுறையாக அவர்கள் பேசுவதை அர்த்தம் செய்து கொண்டேன். "ஒத்து, ஒத்து" என்று சொல்லிக் கொண்டே, அழ ஆரம்பித்திருந்தேன். இருவர் என்னை தூக்கி செல்ல ஆரம்பித்தனர். புதர் மிகுந்த பயத்தைத் தர ஆரம்பித்தது. முள் பட்டு சதை கிழிய ஆரம்பித்திருக்கக் கூடும். பயத்தோடு வலியும் சேர, மழை வேறு தூற ஆரம்பித்தது.
மிகக் கொடூரமாக அறைந்து, என் சட்டையைக் கழட்டத் துவங்கினாள். இனியும் தாங்க முடியாது. நடுக்கம் அதிகமானது.
கண் விழித்து விளக்கைப் போட்டேன். நண்பர்கள் பிரேசில்-பிரான்ஸ் கால்பந்தாட்டம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நன்றாக வியர்த்திருந்தது. நண்பர்களிடம் சொன்னென். இந்த வயதில் இப்படியெல்லாம் கனவு வரும் என்றார்கள். தண்ணீரைக் குடித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.
Image courtesy:The Hindu

27 எதிர் சப்தங்கள்:
கனவு என்றெல்லாம் டிஸ்கி போட்டால் நம்பி விடுவோமா என்ன?
அதன் பிறகு என்ன ஆயிற்று என்று அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறோம்.
:))
நாமக்கல்லார் என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டார் :))
http://karaiyoram.blogspot.com/2006/06/blog-post_30.html
டேய், எத்தன பேருடா இப்படி கெளம்பி இருக்கீங்க?
//மிகக் கொடூரமாக அறைந்து, என் சட்டையைக் கழட்டத் துவங்கினாள். இனியும் தாங்க முடியாது. நடுக்கம் அதிகமானது//
இதுக்குத்தான் வீட்டிலேயே துணி துவைக்கப் பழகிக் கொளவது நல்லது.
வயசுப் பசங்களோட 'லொள்ளு' தாங்கமுடியலைடா சாமி.:-)))
சரி சரி நம்பிட்டேன் ! போதுமா ? அப்புறம் பந்து வலையில விழுந்துச்சா இல்லயா?? :))
கோலைத்தான் கேக்கிறேன் :))))))))))))
முதல்லயே சந்தேகமா இருந்தது, ஹைதராபாத்ல இப்படி எல்லாம் நடக்காதே.. ஏதோ பெங்களூர்னாக் கூட ஒப்புக்கலாமேன்னு.. :))
சரி, சரி, நல்லாத் தூங்கினீங்க போங்க :)
எடுத்தா புதிய பாதை, ஹவுஸ்ஃபுல் இல்ல உள்ளே வெளியே,பச்ச குதிர மதிரி....
ஐயப்பனுக்கும் நேரம் சரி இல்ல மணிகண்டனுக்கும் நேரம் சரி இல்ல!!!
அடுத்த துக்கம் எப்ப?? ஆஃபிஸ்லேயே???
Enna pa..puthu mobile vaangiyaacha..! ;)
கனவு மாதிரி தெரியலயே... ;-)
கைதராபாத்தில் பருவ மழை தொடங்கி விட்டது என்ற செய்தியைச் சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள்.
பொன்ஸ்,
ஹைதராபாத்-ல நடக்காதா? நீங்க இருக்கும் போது வேண்டுமென்றால் "சொர்ணாக்கா" இருக்கும் பயத்தில் எல்லோரும் அடங்கி இருந்திருக்கக் கூடும். இப்போது எல்லாம் பயம் குறைந்துவிட்டது. நீங்கள் வந்தால்தான் பயம் வரும் என்று நினைக்கிறேன். :)
மனசு,
நான் வடிவேலுதாங்க. பார்த்திபன் முதல் பின்னூட்டமிட்டிருக்கிறார்.
லீலாவதி,
புது மொபைல் ஆ? நீங்க எங்க இருந்து கிளம்பி இருக்கீங்க?
thangalai poondra valarum thamil ezhuthalaridam irunthu ithu mathiriyana kathakalai ethir parkkavillai.
நாமக்கல்லாரே!
மனுஷனா நம்புங்கைய்யா!!!
இதுக்கே கண்ணன் போடா வாடான்னு திட்டுறாரு. அடுத்த பதிவு போட்டா அடிக்க வந்துடுவாருன்னு நினைக்கறேன்.
துணி துவைத்து பழகணுமா? பழகிட்டா கனவு வராதா? ;)
கண்ணன்,
எதுக்குங்க இவ்வளவு கோபம் வருது? இதில் ஆபாசமாக எதுவும் எழுதியிருக்கிறேனா? மிகுந்த கவனம் எடுத்துதான் எழுதினேன். சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள முயல்கிறேன்.
முத்து,
நீங்களுமா? ஓ!என்ன இது சோதனை?
துளசி மேடம்,
at this age..... இந்த 'லொள்ளு' தப்பில்லைதானே? :)
ஜொள்ளுப் பாண்டி,
நீங்களாவது நம்பினீங்களே! ;) நன்றி. அதாங்க ஹென்றின்னு ஒருத்தர் கோல் போட்டாரே கவனிக்கலை? :)
Thanks Kupps!
Dear Anony,
Thanks for ur interest on me.
I thought this one as simple story. anyway let me try to develop my skills in a correct way.
அப்பு மொதல்ல கண்ணாலம் கட்டுங்க, அப்புறம் இந்த மாதிரி கனவெல்லாம் வருதான்னு பார்ப்போம்.
//Dear Anony,
Thanks for ur interest on me.
I thought this one as simple story. anyway let me try to develop my skills in a correct way. //
என்னாது இது.. துரோணாச்சாரியார், அனானிமஸுக்கெல்லாம் பீல் ஆய்கிட்டு...
- இப்படிக்கு பொன்ஸ்.. ஹி ஹி
மணி,
மணி 10 ஆகப்போகுது!
பின்னூட்டங்களை எல்லாம் ஏறக்கட்டிட்டு கண்ட கனவுக வர்றதுக்குள்ள நேரங்காலமா இன்னைக்காவது வீட்டுக்கு போங்கப்பு! :)))
மனசு சொன்னதை 101% வழிமொயியறேனுங்...!

//அப்பு மொதல்ல கண்ணாலம் கட்டுங்க, அப்புறம் இந்த மாதிரி கனவெல்லாம் வருதான்னு பார்ப்போம். //
மனசு பிரதர், கண்ணாலம் கட்டினா வேற மாதிரி "பயத்தைப்" பத்தி கனாக் காண ஆரம்பிச்சிடுவாரு.. அம்புட்டுத் தானே?
பிகு: சிபி ஊருக்குப் போயிருப்பதாக நான் நினைப்பதால், அவருக்கு சப்ஸ்டிட்யூட்டாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நினைக்கிறேன் :)
கடைசி வரிகள் பொய்யெனில், முன்னதற்கு முடிவு வேண்டும்!
முன்னது பொய்யெனில், முக்கியமான ஆட்டத்தின் போது தூங்கிய உங்களை......???????
பொன்ஸ் இதுல எந்த பயம் பெட்டர்????
//துணி துவைத்து பழகணுமா? பழகிட்டா கனவு வராதா? ;)
//
கனவு எதுக்கு வருது?
நீங்களே துவைத்து பழகிக் கொண்டால் இது போல ஏதோ குற்றம் செய்வது போல ரகசியமாக சென்று பயந்து பயந்து அந்தப் பெண்ணிடம் சட்டையைக் கழற்றி துவைக்கக் கொடுக்கும் நிலை ஏற்படாது அல்லவா?
மணி கரு கொஞ்சம் சமுதாயத்திற்கு எதிரானதாக இருப்பினும்.. ஹைதராபாத்.. நடையும் ஓட்டமும் நன்றாகவே இருந்தது.... உங்களுக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம் தான்
மனசு...
கண்ணாலமா? விட்டா வாழ்க்கை முழுவதும் இப்படியே சுத்துவேன். வீட்ல பேசிட்டு இருக்கேன். எங்க அம்மாதான் விட மாட்டாங்க போல இருக்கு. :(
சொர்ணாக்கா,
அனானியா இருந்தா என்னங்க? அவர் தப்பா எதுவும் சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. என்ன வளரும் எழுத்தாளர் என்றெல்லாம் பெரிய வர்த்தைகளை உபயோகப் படுத்துகிறார். :)
இளவஞ்சி அண்ணாச்சி...
நன்றி..உங்களின் அறிவுரைக்கு ;)
எஸ்.கே,
நீங்க என்ன இப்படி குண்டக்க மண்டக்க எல்லாம் விசாரிக்குறீங்க? சின்ன பையன் சொன்னா அநுபவிக்கனும். ஆராயக் கூடாது. :)
சிபி,
துணிய நான் கழட்டிக் கொடுக்கலை...மறுபடியும் படிங்க தல...
கணேஷ்,
இந்தப் பக்கம்தான் இருக்கீங்களா?
சந்தோஷமா கீது பா!!!
பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒன்று!
Go.Ganesh!
இது நியாயமா? உம்ம பிரண்டு பதிவுகளை மட்டும் படிச்சிட்டு பின்னூட்டம் போடறது?!
எங்கய்யா இருக்க? எப்படி இருக்க? நீர் மட்டும் இந்த வலைப்பதிவு வியாதில இருந்து தப்பிச்சிட்டு எங்களையெல்லாம் தேமேன்னு விட்டுட்டு போயிட்டீரே! இது நியாயமா?! :)))
சுவாரசியமான எழுத்து..
இது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ;)
செகந்திராபாத் பட்னி சிக்னல் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு 8-9 மனிக்கே ஆரம்பித்துவிடும் இந்த கூத்தும் பேரம் பேசுதலும்...பஸ்ஸில் செல்லும் போது கவனித்துள்ளேன்
Very well written. kust like a Sujatha's "thoondil kadhai"
பேனைப்பெருமாளாக்கிற ஒரு கைவல்யம் உங்கிட்ட இருக்குத்தான்யா.
அதைவைச்சு
உருப்படியாயும் எதனாச்சும் எழுதேன்.
பொ.கருணாகரமூர்த்தி
Post a Comment