May 31, 2006

குட்டி ஜோக்

குட்டி ஜோக் என்றவுடன் என்னமோ ஏதோ என்று படிக்க வேண்டாம். குட்டி என்றால் சிறியது :)

Photobucket - Video and Image Hosting

ஒரு குளத்தில் 23 எறும்புகள் குளித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த யானை ஒன்று குளிக்க விரும்பியது. எதனைப் பற்றியும் யோசிக்காத யானை திடீரென்று குதிக்க, 22 எறும்புகள் கரையின் மீது தூக்கி எறியப்பட்டன. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மீது விழுந்தது.

செமத்தியாக கடுப்பான மீதி இருந்த 22 எறும்புகளும் அந்த ஒரு எறும்பைப் பார்த்துக் கத்தின.

"அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள..."

(சுட்ட ஜோக்தான். படித்துவிட்டு நீங்கள் வலைப்பதிவு அரசியலுடன் ஒப்பிட்டால் நான் பொறுப்பில்லை. :) )

33 எதிர் சப்தங்கள்:

வெற்றி said...

மணிகண்டன்,
நல்ல நகைச்சுவைக் கதை.
நன்றி

அன்புடன்
வெற்றி

நாமக்கல் சிபி said...

//படித்துவிட்டு நீங்கள் வலைப்பதிவு அரசியலுடன் ஒப்பிட்டால் நான் பொறுப்பில்லை//

இதை வேறு சொல்லி எங்களை ஒப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருக்கிறீர்.

:-)

Guru said...

vilunthu vilunthu siriththaen

தேசாந்திரி said...

டாம் & ஜெர்ரி போல யானையும் எலியும் துணுக்குகள் அழியாவரம் பெற்றுவிட்டன போல் இருக்கிறதே. மிக நல்ல நகைச்சுவை.

Vaa.Manikandan said...

அனைவருக்கும் நன்றி.

அப்பு சிபி..எதை பண்ண வேண்டாம்னு சொல்றமோ அதேயேதான் நம்மாளுங்க பண்ணுவாங்க! என்ன பண்றது சொல்லுங்க... ;) சிவனேனு இருக்க விட மாட்டீங்க போல இருக்கே!!!

நாமக்கல் சிபி said...

//சிவனேனு இருக்க விட மாட்டீங்க போல இருக்கே!!!//

போச்சா! இனி உங்க மேல மதச்சாயம் வேற பூசிடுவாங்க!

:-)

கோபி(Gopi) said...

:-)))))

//"அவன அமுக்கிக் கொள்ளுடா மாப்ள..."//

கொள்ளுடாவா? கொல்லுடாவா?

Vaa.Manikandan said...

நாமக்கல்...உங்க ஊர்ல உட்கார்ந்து யோசிப்பீங்களோ!!! நல்ல ஆளுக அய்யா!!!

தவறு ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது மாற்றிவிட்டேன்.சுட்டிக் காட்டியதற்கு நன்றி கோபி.

நாமக்கல் சிபி said...

//உங்க ஊர்ல உட்கார்ந்து யோசிப்பீங்களோ!!! நல்ல ஆளுக அய்யா!!!
//
போச்சுடா! தனிமனித விமர்சனம் வேறயா?

:-)

நாமக்கல் சிபி said...

வலைப்பதிவு அரசியலில் இருக்கும் அத்தனை பிரிவுகளிலும் உங்கள் மீது குற்றம் சுமத்தப் போகிறார்கள்.

:-)

Vaa.Manikandan said...

அய்யா...சிபி ராஜா...என்னால முடியாது சாமீ.....ஆளை விடுங்க!

:-(

நாமக்கல் சிபி said...

//அய்யா...சிபி ராஜா...என்னால முடியாது சாமீ.....ஆளை விடுங்க!
//

அட! அதுக்குள்ளா இப்படி சொன்னா எப்படி?

:-)

பொன்ஸ்~~Poorna said...

அட, மணி, சிபி கிட்ட மாட்டிகிட்டீங்களா!! உங்க ஜோக்கை விட இது நல்லா இருக்கு..

கவிதைய ரசிக்க வந்தா, இப்படி யானை எறும்பு ஜோக் எல்லாம் போட்டுகிட்டு :)

பொன்ஸ்~~Poorna said...

சொல்ல மறந்துட்டேன், அந்தப் படம் நல்லா இருக்கு :)

Kuppusamy Chellamuthu said...

கோபி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கோ மணிகண்டன் சார்.. :)
//கொள்ளுடாவா? கொல்லுடாவா?//

ஜோக்குக்கு ரெஸ்பான்ஸ் ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.

Vaa.Manikandan said...

நான்தான் சிபிகிட்ட இருந்து தப்பிசுட்டன்ல :) அய்யொ அந்த மனுஷன் விட்டா கொலையே பண்ணிடுவாரு போல இருக்கு....இத படிச்சுட்டு மறுபடியும் வந்துடப் போறாரு. என்னால ஆகாதுடா யப்போ!

கவிதையா? போட்டா போச்சு.

குப்ஸ் 'கொல்லுடா'தான் சரி.

கார்திக்வேலு said...

மணி,
உங்கள் புகைப்படத்துல உள்ள உள்குத்தை இப்போ தான்
கண்டுகொண்டேன்.:-)

Venkataramani said...

எங்கே போனாலும் உள்குத்துன்னு ஆரம்பிச்சுடறீங்களே ஐயா.. எனக்கு யானையையும் எறும்பையும் தவிர எதுவும் தெரியலை..

கார்திக்வேலு said...

venkat ,
I was referring the photo in manikandan's profile (the black face one ).

ரொம்ப சுவாரசியமானனது கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம் :-)

நாமக்கல் சிபி said...

//குட்டி ஜோக் என்றவுடன் என்னமோ ஏதோ என்று படிக்க வேண்டாம். குட்டி என்றால் சிறிய//

ஆமா! இதை எதுக்கு தனியா சொன்னீங்க! சொல்லணும்னு அவசியமா? இப்படிச் சொன்னதாலயே விபரீதமா மத்தவங்க யோசிக்கலாம் இல்லையா? வேற என்னவா இருக்கும்னு?

பொன்ஸ்~~Poorna said...

கரெக்ட் சிபி.. அப்படித்தான் விடாதீங்க.. நடத்துங்க :)

குட்டி ஜோக் பெரிய ஜோக் ஆகிக் கொண்டு இருக்கிறது!!!

நன்மனம் said...

//ஆமா! இதை எதுக்கு தனியா சொன்னீங்க! சொல்லணும்னு அவசியமா? இப்படிச் சொன்னதாலயே விபரீதமா மத்தவங்க யோசிக்கலாம் இல்லையா? வேற என்னவா இருக்கும்னு?//

இது இப்ப சிபி சொல்லறதுக்கு என்ன ரீஜன்னா, எனக்கு(சிபிக்கு) அதோட அர்த்தம் புரிஞ்சுடுச்சுனு சொல்ல தான், இதுல "மத்தவங்க" தான் அதோட கோட் வொர்ட்.:-))

Vaa.Manikandan said...

எல்லோரும் வூடு கட்டி அடிக்கறீங்களா!!!

சிபி மாதிரியான ஆளுக எல்லோருக்கும் விளக்கத்தான்....

நன்மனம் உங்களுக்கு என்னாச்சு? அந்த டீம் கூட சேராதீங்க....பூச்சாண்டிங்க!!! :)

பொன்ஸ்~~Poorna said...

மணி, நன்மனம் ஏற்கனவே எங்க சங்கத்துல தான் இருக்காரு..

செட்டிங்ஸ் மாத்தினதுக்கு நன்றி.. சுலபமா இருக்கு இப்போ :)

நாமக்கல் சிபி said...

கரெக்ட் நன்மனம். சரியாச் சொன்னீங்க!

மணிகண்டன் நன்மனம் நம்ம (சங்கத்து) ஆளுதான்.

Vaa.Manikandan said...

va.vaa. sangga thalais...

I agreed...I agreed...ippo enna veNum nu sonna, we can come to one conclusion....ithukku mela oru comment kuda ennala poda mudiyathu....

:)

வெட்டிப்பயல் said...

//ithukku mela oru comment kuda ennala poda mudiyathu....//

அடப் பாவிகளா! பச்சைப் புள்ளய பயமுறுத்தி இப்படி ஒரு முடிவு எடுக்க வெச்சிட்டீங்களே! பய புள்ளைக்கு இனி வேப்பிலைதான் அடிக்கணும் போலிருக்கு! அந்த அளவுக்கு பயந்து போயிருக்கு!

யோவ் சிபி, இனியாச்சும் திருந்தும் வே.
கலாய்க்கறேன் பேர்வழின்னு கண்ணுல படறவங்களையெல்லாம் ஒரு வழி பண்ணிகிட்டு இருக்கீரு!

எங்க! நம்ம பதிவு பக்கம் வந்து உம்ம வேலையைக் காட்டு பார்ப்போம்!

SK said...

LIAR!!

Suka said...

ஜோக் அருமை..

சிபி ரவுஸ் வேற தாங்கல :)

சிபி..
கவனிச்சீங்களா...
'அய்யா' ங்கற வார்த்தைய யூஸ் பண்ணிருக்காறே...கவனிக்கலையா..இல்ல.. உங்க கிட்ட பெயிண்ட் தீர்ந்து போச்சா !?

கார்திக்வேலு said...

Kudos SK !!!
சரியா கண்டுபிடிச்சுட்டீங்க :-)

சந்தோஷ் aka Santhosh said...

:))

Vaa.Manikandan said...

karthik,SK

நான் சின்ன அரிச்சந்திரன். படம் சும்மனாச்சுக்கும்...;)

நாமக்கல் சிபி said...

//'அய்யா' ங்கற வார்த்தைய யூஸ் பண்ணிருக்காறே...//

:-))
மணிகண்டன்! நண்பர் எஸ்.கே வேற கிளம்பீட்டாரு!