May 23, 2006

ஆந்திரா ஸ்நாக்ஸ்(தேவையில்லாதது)

சில ஆந்திரா ஸ்நாக்ஸ் காரமாகக் கிடைத்தது. எபோதுமே ஆந்திரா- காரம்தான். பகிர்ந்து உண்டால் பசியாறும். எடுத்துக் கொள்ளுங்கள்.

1. ரேடியோ மிர்ச்சிதான் இப்பொழுது ஐதராபாத்தில் சூடு பறக்கும் விஷயம். கொடி கட்டிப் பறக்கிறது. மூலை முடுக்குகளிலெல்லாம் 'சாலா hot குரு'தான்.

2.பவன் கல்யாண்(சிரஞ்சீவி தம்பி) நடித்து, தரணி இயக்கிய 'பங்காரம்', அப்படியொன்றும் வரவேற்பினை பெறவில்லை. விஜய் இதே கதையில் தமிழில் நடிக்க இருப்பதாக படம் வருவதற்கு முன்பாக பேச்சு நிலவியது. இப்பொழுது மாறி இருக்கலாம்.

3.த்ரிஷா நடித்து வெளிவந்த 'பவுர்ணமி' படம் தோல்வி அடைந்துவிட்டது. அம்மையாரின் ஆட்டம் அடக்கி வாசிக்கப்படுகிறது.

Photobucket - Video and Image Hosting

4.மகேஷ்பாபு இப்பொழுது முக்கியமான இளைய நட்சத்திரம். இவர் நடித்த 'போக்கிரி' கடைசியாக வெளிவந்து சக்கை போடு போடுகிறது. இது அநேகமாக விஜய்யின் அடுத்த படம் என்று பேச்சு. 1.5 கோடி ரூபாய் அதன் 'ரீமேக்' உரிமை எனப் படித்தேன். இதன் ஹீரோயின் 'இலியானா' ஒன் ஆப் த ஹாட்.

Photobucket - Video and Image Hosting

5.ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியும், சந்திரபாபு நாயுடும் மேடைகளிலும், சட்டப் பேரவையிலும் ஒருவொருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், பொது மேடைகளில் கை கொடுத்து அளாவும் அளவிற்கு நாகரீகமான அரசியலை பார்க்க முடிகிறது. (செம பீலிங்க்ஸ்).

6. பாலகிருஷ்ணா நடித்த 'வீரபத்ரா' ஊற்றிக் கொண்டது. அவரது அருமை பெருமைகளை 'நந்தா'வின் பதிவில் காணலாம்.

7. பாலகிருஷ்ணாவுடன் நடிப்பதாக மீராஜாஸ்மின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார். இதனை அறிந்த ரவிதேஜா 'வாழ்க்கை சீரழிக்கப்படும்' என எஸ்.எம்.எஸ் அனுப்ப ரவிதேஜாவும் பாலகிருஷ்ணாவும் அடித்து உருண்டிருக்கிறார்கள்.

8. சிரஞ்ஜீவி கடைசியாக நடித்த 'ஜெய் சிரஞ்ஜீவா' தோல்வியடைய, முருகதாஸின் 'ஸ்டாலினை' நம்புகிறார். அடுத்து அரசியல் பிரவேசம் இருக்கலாம் என ஒரு பேச்சு. ஹனுமான் என்னும் 'அனிமேஷன்' படத்தில் சிரஞ்சீவி ஹனுமானுக்கு குரல் கொடுக்கிறார்.

9. சண்டைக் கோழி 'பந்தெம் கோடி' என வெளியாகிவிட்டது. புதுப் பேட்டை 'தூள் பேட்டா' என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகிறது.

10. சில சினிமா பிரமுகர்களின் பட்டப் பெயர்கள்.

மெலோடி பிரம்மா -இசையமைப்பாளர் மணி சர்மா
டான்சிங் சென்சேஷன் - பிரபுதேவா
கிரேஸி ஸ்டார்-ரவிதேஜா
யங் டரங் - தருண்
யுவசாம்ராட்-நாகர்ஜூன்
விக்டரி வெங்கடேஷ்
மெகா ஸ்டார் -சிரஞ்சீவி
ஸ்டைலிஷ் ஸ்டார்- அல்லு அர்ஜூன் (நம்ம 'குறும்பு' கதாநாயகன்)
பிரின்ஸ் -மகேஷ் பாபு
யுவரத்னா - பாலகிருஷ்ணா.( தயவு செய்து கவனிக்கவும்)

எப்படிங்க, மேட்டர் நல்லா இருக்கா? சொல்லுங்க. ஓகேன்னா இதையும் தொடரலாம்.