May 20, 2006

நான் நல்லவனில்லை என்பதற்கான சுய விளக்கம்.

முன்பொரு சமயத்தில் கவிதைகளோ அல்லது கவிதைகள் குறித்தோ எழுதப்படும் பதிவுகள், வலைப் பதிவுகளில் கவனம் பெறுவதில்லை என எழுதியிருக்கிறேன்.

ஆனால் எனக்குப் பிடித்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் என் புரிதல்களை பதிவிலிடும்போது பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சியினைத் தருகிறது.

நான் குறிப்பிடும் இந்தக் கவிதைகள் மட்டுந்தான் குறிப்பிட்ட கவிஞரின் மிகச் சிறந்த கவிதைகள் என்று சொல்ல வில்லை. இவை, எனக்குப் பிடித்தவை அவ்வளவே. மேலும் நான் தரும் விளக்கங்களில் பல பிழைகள் இருக்கக் கூடும். அதிகபட்சமாக முழுவதுமே தவறாகக் கூட இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. நான் என்ன புரிந்து கொண்டேனோ அதனை முன் வைக்கிறேன். பொருளினை விவாதிக்கலாம், தவறிருப்பின் திருத்திக் கொள்ளலாம் அல்லது விருப்பமில்லையெனில் அவரவர் புரிதல்களோடு நின்று விடலாம்.

இதனில் புலம்புவதற்கும், அழுவதற்கும் ஒன்றுமே இல்லை.

நான் ஒன்றும் என் எழுத்தில் உண்டாகும் தீயினில் இந்த சமூகக் குப்பைகளை எரிக்க வந்தவன் என்றெல்லாம் நினைத்து எழுதுவதில்லை. சுயமாக எழுத வேண்டும் என்றும் மெனக் கெடுவதில்லை. எனக்குப் பிடித்தவை வேறு சிலருக்கும் பிடித்திருக்கலாம். எனில், ஒரு திருப்தி. நல்ல மழை மாலையில் சூடான ஒரு காபி குடித்தது போல.

தொடர்ந்து பங்கேற்று நல்ல விவாதத்தையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்தும் அனைவருக்கும் நன்றிகள். தமிழ் நவீன கவிதையின் கூறுகளை குறிப்பிட்ட அளவிற்கேனும் தொகுப்பாய்வு(ஆனல்ய்சிச்) செய்ய இயலும் என்னும் நம்பிக்கை உங்களால் வருகிறது.

நாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும், விவாதிக்கவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உலக இலக்கியங்களில் ஒரு சிறு பகுதி கூட முழுவதுமாக நம்மை அடையவில்லை. லூயிஸ் போர்கெ, மர்க்வெஸ், பிரான்ஸ் காப்கா மட்டுமே இலக்கியம் இல்லை. அவர்களைத் தாண்டியும் இன்னும் நிறைய இருக்கின்றன. முதலில் நம்மிடம் இருப்பவையே 'மீள் வாசிப்பு' செய்யப் படாத நிலையில், தூர நிற்பவைகளின் பெயரினை மட்டுமே உச்சரித்துக் கிடக்கிறோம்.

நவீனம், பின் நவீனம் மட்டுமில்லை இலக்கியத்தின் முகங்கள்.

என்னால் அவற்றில் ஒரு துரும்பினைக் கூட எடுத்துப் போட முடியாது. ஆனால், தமிழில் விரவிக் கிடக்கும் நல்லனவற்றை தேடி எடுக்க முடியும் என்னும் நம்பிக்கை மட்டும் ஓரமாக இருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களில் எல்லாம் வரும் காமம் சார்ந்த கூறுகளை தவிர்த்து விட வேண்டுமா?

பெண்கள் படிக்கிறார்கள், அவர்கள் பார்க்கிறார்கள் என பொது ஊடகங்களில் காமம் நுழைவதைத் தடுத்து, 'மல்கோவா ஆன்ட்டி' யோடு ஆண்களின் காம இலக்கியம் நின்று விட வேண்டுமா?

ஒன்றும் புரியவில்லை.

சரி தலைப்பிற்கு வருகிறேன்.

கடைசியாக எழுதிய பதிவில் கல்யாண்ஜியின் கவிதை வரிகளைத் தலைப்பாக வைத்தது சிலருக்கு பிடிக்கவில்லை.

நேற்று உரையாடும் போது நண்பர் ஒருவர், இந்தக் கவிதை வரிகளுக்கு விளக்கம் கொடுத்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் குறித்தான விமர்சனத்தை முன் வைக்கிறார்.அதிர்ச்சியாகவும்,வருத்தமாக இருந்தது. கவிஞரின் பெயரினை உபயோகப் படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று.

விளக்கம் சொன்ன மனுஷ்ய புத்திரனை இப்படி நினைத்தவர் என்னை பற்றி எப்படி நினைத்திருப்பார் என்று தெரியவில்லை. எனது 'புனித பிம்பம்' சிதறுகிறது. :)

காரணங்கள்:

1) 'யோனி' என்னும் சொல்லை உபயோகப் படுத்தும் அளவுக்கு நாகரிக்கம் குறைந்தவன்.

2) 'போர்னொகிராபி' நிறைந்து கிடக்கும் இணையதளத்தினுள் 'யோனி' என்ற சொல்லினை நுழைத்து மேலும் பாழ்படுத்தியது.

3)அதற்கு பதிலாக 'வஜினா' என்று பயன்படுத்தி இருந்தால், 'புனிதம்' காக்கப் பட்டிருக்கலாம். அதனைத் தவிர்த்தது.

4)'யோனி' குறித்து எழுத்தப் பட்ட கவிதைகளையும், அந்தக் கவிஞர்களையும் வலைப்பதிவில் ஏற்றி பெண்களை முகம் 'சுளிக்க' வைத்தது.

5) இனிவரும் பதிவுகளிலும் கவிதையில் ஏற்றப்பட்ட உடலியல் குறித்தான விளக்கங்களை கூச்சமற்று விவாதிக்கப் போவது,

6) பெண்ணியக் கவிதைகளில் வரும் உடலியலை தவிர்க்க முயலாமல் எழுதப் போவது,

7) 'புனிதமானவர்களின்' எதிர்ப்புகளை மீறுவது,

ஆகிய காரணங்களால்,

புரியாமையை கோபமாக மாற்றும் இவர்களுக்கு என்ன பதில் தருவது? - நான் நல்லவனில்லை என்னும் சுய விளக்கத்தைத் தவிர!!!

9 எதிர் சப்தங்கள்:

நந்தன் | Nandhan said...

இந்த பதிவு தேவையில்லாதது என கூற தோன்றுகிறது

Muthu said...

pls ignore punitha pimbangal

Vaa.Manikandan said...

இருந்துட்டுப் போகட்டும் விடுங்க நந்தா...

Feelings...Feelings...

கார்திக்வேலு said...

Mani ,
This is not something totally unexpected its an unavoidable "occupational hazard" :-).
we carry among us a cultural baggage and perceived literary tradition like that of an obese elephant.It takes time.

It is good in one way that you are keeping the communcations open and clear.This will make sure everyone understand the intention and where you stand in what you are trying to do.

பெத்தராயுடு said...

மணி,

இந்த அறிவிப்பு தேவையில்லை என்பது என் கருத்து. மற்றபடி உங்கள் திறனாய்வைத் தொடருங்கள்.

சீனு said...

சரி! Atleast இந்த பக்கங்களிப் பார்ப்போர்ர்க்கு ஒரு எச்சரிக்கையாவது தரலாமே?

Vaa.Manikandan said...

பெத்தராயுடு,
ஒரு பீலிங்ஸ் அவ்வளோதான் ஒண்ணும் சீரியஸ் இல்லை :)

வழக்கம் போலவே கார்திக்வேலுக்கு நன்றி...

அய்யா...சீனு நான் என்ன 'அடல்ஸ் ஒன்லி' படமா ஓட்டுறேன்? A சிம்பல் போட்டு பதிவெழுத!!!

சீனு said...

//அய்யா...சீனு நான் என்ன 'அடல்ஸ் ஒன்லி' படமா ஓட்டுறேன்? A சிம்பல் போட்டு பதிவெழுத!!!//

அதுசரி! உங்களுக்கு U-வா இருக்கிறது மத்தவங்களுக்கு A-வா இருக்கலாம் இல்லையா? அப்புறம் எதுக்கு இந்தப் பதிவு?

Vaa.Manikandan said...

பதில் சொல்ல முடியாத படி மடக்கி விட்டீர்கள். ;)