
தமிழ்மணத்தைத் திறந்தாலே புஷ் கருக்கப் படும் வாடை மூக்கைத் துளைக்கிறது. இவ்வளவு கடுமையான எதிர்ப்பு இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இங்கு(ஐதராபாத்) போராட்டம் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு இன்னொரு இந்தியனின் வாகனத்தைக் கொளுத்துகின்றனர். அமெரிக்க அப்பாவிகளைக் கொன்றதாலேயே பின்லேடன் கதாநாய்கனாகி விட்டான். அவனது புகைப் படத்தைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம்.
தேர்தல் வருவதனால் அரசியல் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துவிடுகிறது. பச்சோந்திகளின் கூப்பாடு காதைக் கிழிக்கிறது. இவர்களுக்கு யாராவது தேவை மென்று கொண்டிருக்க. அது யோகா சாமியார் அல்லது புஷ்.
புஷ் ஒன்றும் உத்தமன் கிடையாதுதான். கொள்கைகள் முற்றிலும் எதிர்க்கக் கூடியவையாக இருக்கலாம். அதற்கென வரைமுறை எதுவும் இல்லையா என்று புரியவில்லை. செருப்பில் அடித்தும், கொடியினைக் கொளுத்தியும். ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பாகத் தெரியும் இவர்களுக்கு 'புனிதப் போர்' நடத்துபவர்கள் மதச் சார்பற்ற திலகங்கள்.
எட்டு சதவீத வளர்ச்சி, 10,500 பங்கு வர்த்தகப் புள்ளிகள், முந்தைய தலைமுறையினர் செருப்பு வாங்கியது போல நாம் கார் வாங்கலாம். எல்லாம் அமெரிக்கவின் தயவில்லாமலா நடந்தது? அப்போது உரக்கக் கத்தியிருக்கலாமே?
அரசாங்கம் அடகு வைக்க முயல்வதை போன்ற தோற்றம் உருவாக்கப் படுகிறது. சரியான பேத்தல். நான் ஆயுதம் தயாரிக்கப் போகிறேன் நீ யுரேனியத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சரி அமெரிக்காவுக்கென்ன அக்கறை? அவர்களுக்கும் இருக்கிறது. இந்தியவின் ஆற்றலுக்கு முழுமையாக பெட்ரோலியத்தை சார்ந்திருந்தால் ,உயரக்கூடிய விலை எல்லொரையும்தான் பாதிக்கும்.
சற்று பலம் பொருந்தியவன் நாட்டமைத் தனம் பண்ணுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இன்னும் 50 வருடத்தில் இந்தியா கூட நாட்டாமையாகக் கூடும்.
போராட்டம் நடத்த வேண்டுமானால் பல முறைகள் உண்டு. பக்கத்து வீட்டுக்கரனின் கண்ணாடியை உடைத்து நடத்த வேண்டியதில்லை. வேலையைப் பாருங்க அப்பு.......
7 எதிர் சப்தங்கள்:
Well said. A rare sensible posts among the mad crowd of American Bashers in Tamilmanam.
Thanks
Sa.Thirumalai
correct...
நம்மூர்ல சந்தில சிந்து பாடற ஆளுங்க ஜாஸ்தி....புஷ் எதிர்த்தா பின் லேடனை ஆதரிக்கணும்னு ஒரு குரூப் திரியுது...பார்த்து இருந்துக்கப்பு.....
எதிர்ப்பு,ஆதரவு இரண்டிலும் மதமும்,அரசியலும் தான் முன்னிற்கிறது.
வாங்க வாங்க, என்னடா ஒரு நேரடி ரிப்போர்ட் இல்லையேன்னு காத்திட்ருந்தேன். சாதரணமாகவே ஹைதராபாத் ட்ராப்பிக் சூப்பர்..இப்போ இவர் வேற வந்துட்டாரா, எத்தனை நாளாச்சு உங்களுக்கு ஆபீஸ் போக?
புஷ் எதிர்ப்பு/ ஒசாமா ஆதரவு என்பதெல்லாம் ஒரு பாஷன்னுங்க..." the in thing இப்போ. "
நல்ல பதிவு மனிகண்டன் அவர்களே.
இப்போது தொழில்துறையை விட்டு விவசாய துறையில் தான் இந்தியா-அமெரிக்கா சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் இதர வேளைகளில் ஈடுபடபோகின்றன.
அடுத்த புரட்சி விவசாயத்தில்.
நாட்டின் 60 கோடிக்கும் மேலான விவசாயிகளை economic mainstreamஇல் கொண்டு வர இந்திய அரசு அதிக முயற்ச்சி செய்ய போகிறது.
அதன் முதல் கட்டம் தான் அமெரிக்கவுடன் விவசாய் துறையில் ஒத்துழைப்பு.
மற்றபடி இந்த புஷ் எதிர்ப்பு என்பது நந்தன் கூறியது போல the "in" thing!
///ர்தல் வருவதனால் அரசியல் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துவிடுகிறது. பச்சோந்திகளின் கூப்பாடு காதைக் கிழிக்கிறது. இவர்களுக்கு யாராவது தேவை மென்று கொண்டிருக்க. அது யோகா சாமியார் அல்லது புஷ்.///
இவர்களுக்கு மேற்குவங்கத்தில் ஒரு கொள்கை rest of india விற்கு ஒரு கொள்கை.
///ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பாகத் தெரியும் இவர்களுக்கு 'புனிதப் போர்' நடத்துபவர்கள் மதச் சார்பற்ற திலகங்கள்.
////
ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பு,தீண்ட தகாதவர்கள். ஆனால் மற்றவர்கள் தீண்டகூடியவர்கள்,தொகுதி பங்கு வைக்ககூடியவர்கள். "எங்கெங்கோ" கணக்கெடுப்பார்கள்.
எதிர்க்கும் இவர்களே ஆட்சியில் இருந்தால் வரவேற்க சிவப்பு கம்பளத்திற்கு மேலே ஏதாவது இருக்கிறதா என்று யோசிப்பார்கள்.
எல்லாம் ஓட்டு அப்பு ஓட்டு.
அப்பு! சாரி மணிகண்டன்
பலமுள்ளவன் நாட்டாமைத்தனம் பண்ணலாமா? லாஜிக்கே சரியில்லையே!.... அப்புறம் நோஞ்சானெல்லாம் ஒண்ணா சேந்தா நாட்டாமையெல்லாம் நாட்டுக்க வேண்டியதுதான்.
பக்கத்து வீட்டுக்காரன் கண்ணாடியை உடைத்து போராட்டம் நடத்த வேண்டியதில்லைதான்!
நாம் வெறுமனே கண்ணாடியைத்தான் உடைக்கிறோம். அமெரிக்காவோ பக்கத்து வீட்டு ஆட்களையே அம்பேல் பண்ணுவான்... இதுதான் வித்தியாசம்....
(கசாப்பு கடையில் காந்தி படம் தொங்க விடுற மாதிரி இருக்கிறது உங்கள் உபதேசம்...)
Post a Comment