தனிமை-1
தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை
தனிமை-2
கண்ணாடி பதித்த
ஓட்டின் வழியே
நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த வெய்யிலின்
ஒளியில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்.
உருக்கமற்ற
உணர்ச்சியில் வழியும்
வியர்வையில்.
வா.மணிகண்டன்
நன்றி:காலச்சுவடு'அக்.2005
Oct 3, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 எதிர் சப்தங்கள்:
மணிகண்டன்
நன்றாயிருக்கின்றன கவிதைகள்
arumai kavithai thodarnthu eluthugkal
wanRi,
chanthiravathana ,raakini
கவிதைகள் சிலது வாசிக்கத்தோணும், சிலது யோசிக்க வைக்கும், உமது 2வது வகை. வாழ்த்துக்கள் நன்பனே
chanthiravathana ,raakini
SINTHIKKA VAIKKUTHU ITHU..chanthiravathana RAA ALLA ´RAHINI
chanthiravathana oh.. nigkala.. ungkal padaippukkal mupee oruthadavai paartheen.
Post a Comment