"பண்பாட்டு நாயகி" குஷ்பூ ஒன்று சொல்லி இருக்கிறார்.யார் வேண்டுமானாலும் யார் கூடவும் உறவு வைத்துக்கொள்ளலாம்.(ஆணும் பெண்ணும்தாங்க).ஆனால் அந்த பெண் கர்ப்பம் ஆகாமலோ அல்லது கண்ட நோய் வராமலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.எந்த "அறிவுள்ள"(அல்லது படித்த ஆணும்)தன் மனைவி கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது.
குஷ்பூ கோயில்,குஷ்பூ இட்லி,குஷ்பூ ஜாக்கெட்(?)னு எல்லாம் கொண்டாடிய தமிழ் மக்களுக்கு எவ்வளவு தேவையான கருத்துக்கள்.
சுந்தர்.c க்கும் திறந்த மனது.மனைவியை முழுமையாக ஆதரிக்கிறார்.தமிழ் பண்பாட்டை பற்றியும்,அதற்கு வரைமுறைகள் வைப்பதற்கும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
என்று தெரியவில்லை.
தங்கர் பச்சான் ஏதாவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு வந்த இவருக்கு இப்போது தமிழ்நாடுப் பண்பாடு குறித்துப் பேசும் போது அறிவு எங்காவது தொலைந்து விட்டதா என்று தெரியவில்லை.
அனைத்து நிகழ்வுகளுக்கும் எதாவது பின்புலம் இருக்கும்.இந்த நிகழ்வுக்கும் இருக்கிறது.புடவை கட்டிப் பேசினால் அவள் தமிழ் பெண்ணாகி விடுவாள்.தமிழ்நாட்டு மருமகள் என்றெல்லாம் எழுதிய தமிழ் ஊடகங்களும்,தமிழ் மக்களும் தான்.
இவர்கள் எப்படியோ தொலைந்து/அழிந்து போகட்டும்.குஷ்பூ பிரபு என ஆட்டோகிராஃப் போடட்டும்.வேறு மலையாள நடிகருடன் சுற்றட்டும்.எதாவது டைரக்டரை திருமணம் செய்து கொள்ளட்டும்.தன்னுடன் நடிக்கும் நாடக நடிகருடன் கும்மாளம் அடிக்கட்டும்.
ஏற்கனவே கரையான் அரித்துக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஏன் இன்னும் விஷத்தை ஊற்ற வேண்டும்?.இவர்களுக்கு எல்லாம் ஏதாவது வகையில் பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும்.அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.விபச்சார வழக்கில் கூட.
விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் போது கூட தமிழ்நாட்டில் யாருக்கும் செக்ஸ் பற்றி தெரியாதா என வினவுகிறார்.தெரியும்.அதற்காக சாலையில் கூட உறவு வைத்துக்கொள்ள முடியுமா?.இவரை எல்லாம் அறிவாளி என்று கொண்டாட ஒரு கூட்டம் தயாராகி விடும்.
இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் இதை போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்.அல்லது விவாததிற்கென வைக்கப்படும் போது,எதிர் வினைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்.பிறிதொருவர் இது போன்றதொரு கருத்தை வெளியிட தயங்க வேண்டும்.
Sep 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
26 எதிர் சப்தங்கள்:
இது பற்றி ஏற்கெனவே பெரிய சண்டை நடந்துவருகிறது. எனக்கென்னவோ இதைப்பற்றி எழுதுவதூடக ஏதோ ஒரு இன்பம் கிடைக்கிறதோ என்று தோன்றுகிறது.
அந்த இன்பத்தைப் பெறவே இப்படியான பதிவுகள் வருகிறதென்று எண்ணும்படி விதம்விதமாக குஷ்புவைப் பற்றியும் கற்பைப் பற்றியும், தமிழரின் 'பண்பாடு' பற்றியும் கதைவிடுகிறார்கள்.
கிசுகிசு எழுதுவதில் இருக்கும் இன்பத்துக்கும் நோக்கத்துக்கும் சற்றும் குறைச்சலில்லாத வகையில் இப்போது இப்பிரச்சினை கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பெண் என்பதன் வரையறை என்ன? எந்தவித்தில் தமிழ்ப்பெண்கள் மற்றவர்களை விட மேலானவர்கள்? எந்தவிதத்தில் தமிழ்க்கலாச்சாரம் மற்றவைகளைவிட மேலானது? முக்கியமாக இப்படியான கருத்துக்களைச் சொல்ல என்ன தகுதிவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
இப்போது உங்கள் பதிவுகூட பிரச்சினையைவிட்டு, தனிப்பட்டவிதத்தில் தாக்குதலை நடத்துவதாகவே எனக்குப் படுகிறது.
கேட்டுக்கேட்டுச் சலித்துவிட்டதென்றாலும், மற்றவர்களிடத்தில் ஏதும் மறுமொழியிடவில்லையென்றாலும், உங்களிடத்தில் கேட்கவேண்டுமென்று நினைத்தேன்.
நீங்கள் கூறும் தமிழ்க்கலாச்சாரம் அல்லது பண்பாடு எத்தனையாம் ஆண்டிலிருந்து தொடங்குகிறதென்று சொல்ல முடியுமா? 1900 இன் பின் என்று கொள்ளலாமா? ஏன் கேட்கிறேனென்றால் அதைத் தீர்மானித்துவிட்டால் எங்கள் "தமிழ்ப்பண்பாட்டின்" பெருமைகளை வைத்துத் தொடர்ச்சியாகக் கருத்தாட முடியும். சில நூற்றாண்டுகளுக்கு முன்சென்று கிளறினாற்கூட நாற்றம் தாங்கமுடியாது.
குஷ்பு சொன்னது தவறு. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆனால் தங்களின் பதிவில் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.
//எந்த "அறிவுள்ள"(அல்லது படித்த ஆணும்)தன் மனைவி கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது.//
எத்தனை அறிவுள்ள ஆண்கள் திருமணத்திற்கு முன்பு வேறு பெண்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்காமலிருக்கிறார்கள். கற்பென்பது உடல் ரீதியானதல்ல அது உள்ளம் சார்ந்தது. பணத்திற்க்காக உடலை விற்றாலும் உள்ளத்தால் ஆண்களை வெறுக்கும் அனைத்து விபச்சாரிகளும் கற்புக்கரசிகளே.
எனக்கு தெரிந்தவரை ஆண்கள் எல்லோரும் கற்பிழந்தவர்கள். இதில் அறிவுள்ள அறிவற்ற என்ற வாதத்திற்க்கே இடமில்லை. கற்பென்பது உளவியல் சார்ந்த விஷயம் அதை உடல் சார்ந்த விஷயமாக இனியும் பார்க்கக் கூடாது.
கொழுவி சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதே சமயம் குஷ்பு சொன்னதற்கு 100% எனது எதிர்ப்பும் உண்டு.
//"பண்பாட்டு நாயகி" குஷ்பூ ஒன்று சொல்லி இருக்கிறார்.யார் வேண்டுமானாலும் யார் கூடவும் உறவு வைத்துக்கொள்ளலாம்.(ஆணும் பெண்ணும்தாங்க).ஆனால் அந்த பெண் கர்ப்பம் ஆகாமலோ அல்லது கண்ட நோய் வராமலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.//
Ithula enna thappu?
//எந்த "அறிவுள்ள"(அல்லது படித்த ஆணும்)தன் மனைவி கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது//
She points out male hypocracy.Male does everything from eve teasing to premarital sex.But he expects his wife to be pure.Kushboo points out this irony.
//சுந்தர்.c க்கும் திறந்த மனது.மனைவியை முழுமையாக ஆதரிக்கிறார்.தமிழ் பண்பாட்டை பற்றியும்,அதற்கு வரைமுறைகள் வைப்பதற்கும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
என்று தெரியவில்லை//
She said what she felt in her mind.She did not say she is defining tamil panbadu
//விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் போது கூட தமிழ்நாட்டில் யாருக்கும் செக்ஸ் பற்றி தெரியாதா என வினவுகிறார்.தெரியும்.அதற்காக சாலையில் கூட உறவு வைத்துக்கொள்ள முடியுமா?.இவரை எல்லாம் அறிவாளி என்று கொண்டாட ஒரு கூட்டம் தயாராகி விடும்//
Did she say we should have sex in streets?
மணிகண்டன் , உங்க வயசு உங்களைப் அப்படித்தான் பேச வைக்கும். வாழ்க்கை பற்றிய அனுபவம் இன்னும் கொஞ்சம் கிடைத்தால் உங்க பார்வை மாறும். உங்க பார்வையிலே, தமிழ்ப் பெண்கள் அனைவரும் கற்பின் கனலிகள், அதை இந்த வடக்கத்திப் பெண் வந்து குலைக்கிறார் என்கிற ஆவேசம் தான் தெரிகிறது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, கற்புங்கறதே ஒரு தவறான கற்பிதம் னு புரியவரும். உடலளவிலே, ரெண்டு பேர் இணையும் பொழுது, அந்த இரண்டு பேர் மனசிலும் இருக்கிறவர்கள் யார் யார் என்று யாராவது கண்டுபிடிக்க முடியுமா? அப்படி வேற வேற நபர்கள் இருக்கும் பட்சத்தில், கணவனும் மனைவியும் கற்பொழுக்கத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது இல்லையா?
இப்ப குஷ்பூ சொன்ன விவகாரத்துக்கு வருவோம். திருமணத்துக்கு முன்பு, பெண்கள் உடலுறவு கொள்வதில் தவறில்லை. ஆனால், பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அர்த்தம் வருகிற மாதிரி சொல்லி இருக்கிறார். நீங்க இந்த ஏமநோய்க்கு வருகிற விளம்பரங்களைப் பார்த்ததுண்டா? ஆணுறை அணிந்து கொண்டு பாதுகாப்பான உடலுறவு கொள்ளவும் என்பதுதான் அவர்கள் பிரச்சாரத்தின் சாராம்சம். யாருடன், எப்போது, திருமணத்துக்கு முன்பா, பின்பா என்பது பற்றி யாரும் ஆண்களுக்கு அறிவுறுத்துவதில்லை. குஷ்பு ஸ்தானத்தில் இருக்கும் ஆண் நடிகர், இளைஞர்கள், திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதில் தவறில்லை, ஆனால், ஜாக்கிரதையாக இருக்கவும் என்று சொல்லி இருந்தால், அதற்கு நம்மவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? முற்போக்காகச் சிந்திக்கிறார் என்று சொல்லி பாராட்டியிருப்போம். அப்படி வெளிப்படையாக இல்லாவிட்டால் கூட, இப்படி பொங்கி எழுந்திருக்க மாட்டோம். ஆம்பளைப் புள்ளைங்க வயசு காலத்திலே அப்படி இப்படின்னுதான் இருக்கும் என்று இப்போது கற்பொழுக்கம் பற்றி பேசும் பெருசுகள் கூட, ஆதரவாகப் பேசியிருக்கும். கொஞ்சம் தண்ணி ஊத்திக் கொடுத்தால், தான் செய்த மன்மதலீலைகளை எல்லாம் கூட அவிழ்த்துவிடும்.
18 வயது முடிந்த பெண், தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அந்தப் பெண், தனக்குப் பிடித்தவனுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அதைத் தடுக்க நீங்கள் யார்? கற்பு, அது இது வென்று காரணம் சொல்லித் தடுத்தாலும், அதே காரணத்தைக் காட்டி, ஒரு ஆணைத் தடுக்க முடியுமா? இந்த நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், பெண்கள் தொடர்பான பலவிதமான குற்றங்களுக்கும், இப்படிப் பட்ட அழுத்தங்கள் தான் காரணம்.
திருமணத்துக்கு முன்பு, உடலுறவு கொண்டுவிட்டாள் என்பது, அவளைக் கட்டிக்கப் போறவன் படவேண்டிய கவலை. இதிலே என்ன இருக்கு? நான் கூட திருமணத்துக்கு முன்னாலே....இப்படித்தான் என்று புரிந்து கொள்கிறவர் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். இல்லை எனக்கு பத்தரை மாத்து தங்கம் தான் வேண்டும் என்கிறவர் அதற்காகக் காத்திருந்து கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். இது சம்மந்தப் பட்ட ரெண்டு பேரோட பிரச்சனை. எல்லாரும் இப்படித்தான் இருக்கணும்னு சொல்ல நாம யார்?
அப்ப ஒழுக்கம், கட்டுப்பாடு, வரைமுறை... ந்னெல்லாம் கேப்பீங்க.. அதெல்லாம் ஒப்பிட்டுப் பாத்து கிடைக்கிற வார்த்தைங்க.. அதுக்கு சரியான வரையறை எல்லாம் கிடையாது. வங்காளத்துப் பக்கத்துலே ஒரு கிராமத்துலே, கணவன் இறந்து போனா, வாரிசுக்காக, அந்த விதவை, கணவனின் சகோதரியைக் கல்யாணம் செய்து கொள்ளணும்னு ஒரு சம்பிரதாயம் இருக்கு. நகர்புற நாகரீகத்துலே இருக்கிற நம்மாலே, இதை யோசிச்சுப் பாக்க முடியுமா? வங்காளம்ங்கிறது எங்க? இதோ பக்கத்துலே தான் இருக்கு.... எத்தனையோ கலாசாரத்துலேந்து மாறி மாறி, தலைமுறைகள் கடந்து வந்திருக்கிற நாம, அது போன்ற ஒரு கலாசாரத்தின் எச்ச சொச்சமாகக் கூட இருக்கலாமில்லையா? ஒரு குறைஞ்ச கால்கட்டத்தை வெச்சு, விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் வளத்துக்காதீங்க..
உங்களுக்கு இருக்கிற சுதந்திரங்களும், சலுகைகளும் உங்கள் வயதை ஒத்த ஒரு பெண்ணுக்கு இருக்கான்னு , உங்க நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க பாக்கலாம்....அவங்களுக்கு கிடைக்க வேண்டியது... கவனிக்க நாம தர வேண்டியது இல்லை... கிடைக்க வேண்டியது நிறைய... அதிலே பாலியல் சுதந்திரமும் ஒண்ணு....
அப்ப எல்லாப் பொம்பிளையும் அவுத்துப் போட்டுட்டு ஆடணுமான்னு கேக்காதீங்க. அவுத்துப் போட்டுட்டு ஆடணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கிற சுதந்திரத்தை அவங்ககிட்டவே விட்டுடுங்க..
சொல்ல விட்டுப் போனது....
அப்பறம் மணிகண்டன், சௌக்கியந்தானே? எம்.டெக் படிப்பை நல்ல படியா முடிச்சிட்டீங்களா? இன்னும் அதிலேயே இருக்கீங்களா இல்ல, கொட்டிக் கொடுக்கிறாங்கன்னு எல்லார் போலவும் நீங்களும் code எழுதக் கிளம்பிட்டீங்களா?
முந்ததைய பின்னூட்டத்தில் ஒரு திருத்தம் :
வாரிசுக்காக, அந்த விதவை, கணவனின் *சகோதரியைக்* கல்யாணம் செய்து கொள்ளணும்னு
அது *சகோதரியை* இல்ல, சகோதரனை
திருமதி.குஷ்பு சுந்தர் நம்புகிற அல்லது எதிர்பார்க்கிற ஒழுக்க கோட்டுபாட்டை ஆதரிக்கும் நல்இதயம் கொண்ட தமிழகுடிமக்களில் எத்தனை பேர் தங்கள் தாரமும்/சகோதரிகளும் அவ்வாறு நடப்பதை ஆதரிப்பார்கள்/அனுமதிப்பார்கள். வாதத்திற்கு எதையும் பேசலாம்...செய்யமுடியாது.அவ்வளவு ஏன் திருமதி.குஷ்பு சுந்தர் இருக்கும் திரைத்துறையில் எத்தனை தமிழச்சிகள் உச்ச நட்சத்திரமாய் கோலோச்சியிருப்பார்கள் என்கிற கணக்கை எடுத்துப்பார்த்தாலே.....தமிழ் பெண்கள் ஏதோ ஒரு இடத்தில் தங்களை இழக்க தயாராய் இல்லை என்பது தெளிவாகும்.
பூனை கண்ணை மூடிகொண்டு உலகம் இருட்டிவிட்டதென்பதைப் போல கருத்து தெரிவித்திருக்கிறார்....தங்கருக்கு இழைப்பட்ட அநீதி இந்த பெண்மணிக்கும் நேராமலிருக்க ப்ரார்த்திப்போமாக.......
கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம்....ஆரோக்கியமான விவாதங்களினால் நம்மை பட்டை தீட்டிக்கொள்வோம்.
சொல்ல வந்ததை (அவர் வைத்த வாதம் நான் நினைத்ததை விட வேறு திசையில் இருந்தாலும்)
கோயிஞ்சாமி-எட்டுஏ பொறுமையாக சொல்லியிருக்கிறார். கற்பு என்று ஒன்று கற்பிக்கபடுவதன் நோக்கங்களை புரிந்து கொண்டால் கொஞ்சம் நல்லவிதமாக யோசிக்க முடியும். இதற்கு குஷ்புவை மிகவும் பாராட்டுகிறேன்.
//வங்காளத்துப் பக்கத்துலே ஒரு கிராமத்துலே, கணவன் இறந்து போனா, வாரிசுக்காக, அந்த விதவை, கணவனின் சகோதரியைக் கல்யாணம் செய்து கொள்ளணும்னு ஒரு சம்பிரதாயம் இருக்கு. //
மிஸ்டர் .கோயின்ஸ், இது நம்ம குருசேத்திர மகாபாரத் காலத்திலும் இருந்ததா டீவீலே காட்றானே பாக்கலியோ?
It would be nice if all those that are going about writing these articles actually read the article from India Today to read what exactly was said and in what context.
As far as 'Karpu' is concerned, it's too bad that most people seem to have automatic preference to Vijaykanth type of films. Unfortunately, in real life, those people are the ones who live with no restrictions.
Coming to India Today, it featured similar article some years back and even actor Madhavan made similar comments about youngsters. Ennavo, oor uzhagathila nadakkaathatha kuspoo sonna maathiri allo ellaarum sandaikku varranga...
-Kajan
இதை நான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. ஓரு வேளை இது "நயன் தாரா சினிமாவிற்கு வந்த சூட்சுமம்!" மாதிரி எதாவதா? குஷ்பு சொன்னதில் தவறு எதுவும் இல்லை என்றே படுகிறது. அப்படியே இருந்திருந்தாலும் அதை இங்கு விமர்சித்த முறை ஒரு மூன்றாம் தர பத்திரிக்கையில் வருவது போல் இருக்கிறது. போலித்தனமான கற்பிதங்களும், dogmatic mentality மலிந்து காணப்படுகிறது. பல நாட்களாய் தள்ளி போட்டு வரும் நம் சந்திப்பை உடனே நிகழ்த்துமாறு ஆர்வம் ஏற்படுகிறது
--nandhan
www.mkannadi.blogspot.com
திரு. சதயம் அவர்களின் கேள்வியே என் கேள்வியும், எத்தனை பேர், குஷ்புவை ஆதரிப்பவர்கள், தங்கள் தாய், தங்கை, தமக்கை, மனைவி, திருமணத்திற்கு முன் உடல் தொடர்பு வேற்று ஆணுடன் வைத்திருப்பதில் உடன்பாடு கொண்டவர்கள்? அல்லது அவர்களது இச்சை அதுவா?? தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் சிறு பொறி இது, முளையிலேயே கிள்ளி எறிவதை விட்டு, ஆதரவாம் ஆதரவு, சிரிப்பாய் இருக்கிறது இந்த சீர்மிகு ;) சிந்தனையாளர்களைக்கண்டு...:)
இங்கு குஷ்புவுக்கு காவடி தூக்குபவர்களிடம் கேட்க விரும்புவது இவைதான்:
1) குஷ்பு சொல்வதிலுள்ள நியாயத்தை? தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பீர்களா?
2) பாதுக்காப்பான உடலுறவு கொண்டால் பெண்மை பாதுகாக்கபட்டதாகி விடுமா?
3) ஒரு விலைமாதுவிடம் கற்பு பற்றி கேட்டால், அவள் சொல்லும் கருத்துக்கும் குஷ்பு சொன்ன கருத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. (திருடனிடம் சட்டம் ஒழுங்கைப்பற்றி பேசுவது போல்தான் இதுவும்). கற்பு பற்றி நடிகை குஷ்பு சொல்வதில் நியாயம் உண்டா? (ஒரு மருத்துவரோ அல்லது டீச்சரோ என்றால் ஓரளவு நியாயம் இருக்கலாம்?)
4) குஷ்பு தன் வாழ்க்கையைப் பற்றி சொல்லி இருந்தால் யாரும் கோபப்படபோவதில்லை. பொத்தாம் பொதுவாக "பெண்கள்" என்றும் "படித்தவர்கள்" என்றும் சொல்லி, தன் கடந்தகால வாழ்க்கைக்கு நியாயம் கற்பித்துள்ளார். இது சரியா?
5) படித்த ஆண்மகன் பெண்ணிடம் கற்பை எதிர்பார்க்காதது இருக்கட்டும். படித்த பெண் தன் கணவன் பாதுக்காப்பான முறையில் பிற பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் பொறுத்துக் கொள்வாளா?
தம்பி மணிகண்டன், 23 வயதிலேயும் உம் சமூகப் பொருப்பை எண்ணி மகிழ்கிறேன். கற்பு பற்றி பேசும் பெருசுகள் தாங்கள் சபலப் பார்வை பார்ப்பதில்லை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசட்டும். வாழ்த்துக்கள் ராசா!
கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம்....
சதயம், shrishiv..கோயிஞ்சாமி 8A அழகாக விளக்கியிருக்கிறார். அப்படியும் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? இது ஒரு தனி மனிதன்/மனுஷி முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஒருவரின் தங்கையோ, தாரமோ அப்படிபட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் இஷ்டம். இதை சரி/தவறு என்று சொல்ல நாம் யார்?
விதவையான என்னுடைய சித்தி என் தந்தையாரை ஒரு நாள் அணுக முயற்சி செய்தாள் என்றும், என் தந்தை அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார் என்றும் என் தாயாரிடமிருந்து கேள்விப்பட்டேன். சித்தியிடம் என் தாய்க்கு கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது.
அனானி, ஆரம்பிச்சுடீங்களா? முட்டாள்தனமா தனி மனித தாக்குதல்லே ஈடுபடாதீங்க. உங்க மாதிரி ஆளுங்களால தான் நானும் அனானியா இருக்க வேண்டியிருக்கு!
//பூனை கண்ணை மூடிகொண்டு உலகம் இருட்டிவிட்டதென்பதைப் போல கருத்து தெரிவித்திருக்கிறார்....தங்கருக்கு இழைப்பட்ட அநீதி இந்த பெண்மணிக்கும் நேராமலிருக்க ப்ரார்த்திப்போமாக.......///
நிச்சயமாக் பிரார்த்திக்கலாம்.. ஒருவேளை தங்கரு எதிராக முதல் ஆளாக நின்று குஷ்பு கும்மியடிக்காமல் இருந்திருந்தால்..
அன்று ஆவேச நடனமாடியவர் குசுபு தானே??
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
இது வரை இந்த பிரச்சினையில் ஆபாச பேச்சுகள் தனி மனித தாக்குதல்கள் இல்லாமல் இருந்தது, இதோ இங்கும் வந்துவிட்டது, இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
கொழுவி,
//சில நூற்றாண்டுகளுக்கு முன்சென்று கிளறினாற்கூட நாற்றம் தாங்கமுடியாது.//
என்றோ கெட்டவனாக இருந்தவன் என்றும் நல்லவனாக முடியது என்பது போல் இருக்கிறது உங்கள் கருத்து.என்றொ ஒரு காலத்தில் நாறி கிடக்கட்டும்.ஒரிரு நுற்றான்டுகளாக(முன்பே கூட நன்றாக தான் இருந்திருக்கும்.உங்கள் ஆசைக்காக)நன்றாக இருக்கிறதா இல்லையா?அதை ஏன் சீர்குலைக்க முயல வேண்டும்.எல்லாம் ஒரு பரபரப்புக்காகத்தான்.
//தமிழரின் 'பண்பாடு' பற்றியும் கதைவிடுகிறார்கள்.//
தமிழ் பண்பாடு பற்றி கதை விட நான் என்ன தமிழ்ப் பண்பாடு கப்பாளனா?என் சகோதரி,என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என எண்ணுகிறேனோ,அதற்கு நேர்மாறாக கருத்துச் சொல்லுபவர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
//எந்தவித்தில் தமிழ்ப்பெண்கள் மற்றவர்களை விட மேலானவர்கள்? எந்தவிதத்தில் தமிழ்க்கலாச்சாரம் மற்றவைகளைவிட மேலானது? முக்கியமாக இப்படியான கருத்துக்களைச் சொல்ல என்ன தகுதிவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?//
தமிழ் கலாச்சாரமோ,தமிழ் பெண்களோ எந்த விதத்தில் மேலானவர்கள் என்பதனை குறிப்பிடப் போவதில்லை.ஆனால் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை எனச் சொல்ல முடியும்.
கணேஷ்,
//எந்த "அறிவுள்ள"(அல்லது படித்த ஆணும்)தன் மனைவி கன்னிப்பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது.//
இந்த கருத்தைச் சொன்னது குஷ்பூ தான்.நானில்லை.
கோயின்சாமி,
//மணிகண்டன் , உங்க வயசு உங்களைப் அப்படித்தான் பேச வைக்கும். //
என்னுடைய வயசுக்கு நான் குக்பூவின் கருத்தைக் கொண்டாடி இருக்க வேண்டும்.
//அவுத்துப் போட்டுட்டு ஆடணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கிற சுதந்திரத்தை அவங்ககிட்டவே விட்டுடுங்க..//
எந்த தமிழ்னாட்டுப் பெண்ணும் ஆட வேண்டும் என்று சொல்ல மாட்டாள் என்றே நம்புகிறேன்.அவர்களை ஏன் நீங்களாக ஆடச் சொல்லுகிறீர்கள்?.
நன்றி சதயம்,கார்த்திக்ராம்ஸ்,கஜன்.
நந்தன்,
தரம் தாழ்ந்து எழுதி இருக்கிறேனா?எனக்கென்னவோ மனதில் பட்டதுதான்.மூர்க்கத்தனமாக எதிர்க்க வேண்டும் என்றே எழுதினேன்(என்னுடைய பதிவின் இறுதிப் பத்தியை படியுங்கள்).விரைவில் சந்திப்போம்.
நன்றிகள் ஸ்ரிஷிவ்,ஆரோக்கியம்,ரவியா.
கனேஷ் இந்த அனனிமஸ்ன் கருத்துக்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து வலைப்பதிவர்களை இப்படி கீழ்த்தரமாகத்தாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
anonymous,
please try to avoid personal attacks.this is my humble request.
மணிகண்டன்,
அந்த அவதூறான பின்னூட்டத்தை முதலில் அழியுங்கள்.ஏன் அதை இன்னும் வைத்திருக்கிறீர்கள்?
மணிகண்டன்,
நான் கலாச்சாரம் பண்பாடு பற்றிக் கதைத்தது ஏனென்றால், ஏதோ தமிழ்ப்பண்பாடு புனிதமானது, மற்றச் சமூகங்களைவிட எமது கலாச்சாரம் உயர்ந்தது, மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது, சேலைகட்டினால் மட்டும் தமிழ்ப்பெண் ஆகிவிடமுடிாயாது (என்று சொல்வதூடாக ஏதோவொரு சிறப்புத்தன்மை தேவை என்று நிறுவுவது) என்றெல்லாம் சொல்லப்பட்டதால் தான் நான் அதைச் சொல்ல வேண்டிவந்தது. அதுதான் கேட்டேன், உயரிய பண்பாடென்று சொல்லப்படுவது எப்போதிலிருந்து தொடங்குகிறதென்று?
தமிழ்ப்பெண்கள் எப்படி மற்றவர்களைவிடக் கீழ்த்தரமானவர்களென்று நான் கேட்கவேயில்லை. தமிழ்ப்பெண்களாக இருக்க சிறப்புத்தன்மை வேண்டுமென்று பொருள்பட நீங்கள் கருத்தெழுதியதால்தான் நான் எந்தவிதத்தில் மேம்பட்டவர்கள் என்று கேட்டேன். கூடவே எந்தவிதத்தில்நீங்கள் சொல்லும் கலாச்சாரம் உயர்ந்ததென்றும் கேட்டேன். ஒரு கருத்தை எதிர்கொள்ளவே அவனோடு படுத்தாய் இவனோடு கிடந்தாய் என்ற வகையில் எதிர்வினையாற்றும் உங்களை எதிர்க்க அவர்கள் எந்த வரையறைக்கும் போகவேண்டி வருமென்பது தெளிவாகவே தெரிகிறது. நான் ஏற்கெனவே சொன்னபடி குஷ்புவைப் பற்றி எழுதுவதற்கூடாகக் கிடைக்கும் பாலியற்கிளுகிளுப்பைத்தான் இங்குவரும் சில பின்னூட்டக்காரர்களும் அடைகின்றனர்.
இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை.
நல்லா கோவமாத்தான் எழுதியிருக்கீங்க. அதே கோவத்தோட வெளிப்படையா
இரண்டு அம்மாக்களுடன் வலம் வரும் கருணாநிதி போன்ற தமிழ் ஆண்கள்,
தமிழ் காவலர்களையும் கண்டித்திருக்கலாமே. செய்வீர்களா?
பெண்கள் குறித்து ஆண்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை! கவலை!!பொறுப்பு!!!
படுப்பதை பற்றி குஷ்பு எப்படிக் கதைக்கலாம்? சானியா மிர்ஸாவின் பாவாடை எவ்வளவு மில்லிமீற்றர் கூட இருக்க வேண்டும்? என்று இந்த ஆண்களுக்கு தலை நிறையப் பிரச்சினைகள்.
ஆண் தனது அதிகாரத்தை தக்க வைக்கவும், பெண்ணை உடமையாய், அடிமையாய், தாசியாய் காலந்தோறும் வைத்திருக்கவும் கட்டியமைத்துள்ள கற்பிதம் நொருங்கிக்கொண்டு போவதைப் பார்த்து குலை நடுங்குகிறார்கள். தமது வழமையான தற்பாதுகாப்பு ஆயுதங்களான கற்பு, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
துடித்துப் பதைத்து தங்கள் ஆண்குறிக்கு ஒளிவட்டம் போடும் இந்த ஆண்களைப் பார்த்து ஆத்திரப்படலாமா? ஆணியம் உடைத்து நொருக்கப்படுவதால் பயந்து நடுங்கி மூத்திரம் போகும் இந்த ஆண்களைப் பார்த்து கை தட்டிச் சிரிக்கலாமா?
இந்திய அரசியல் சட்டப்படி, ஒரு பெண் தன் விருப்பமானவருடன் உறவு கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், இதை குஷ்பூ போன்றவர்கள் அதை முன்மொழிவதற்கு தகுதியில்லை என்பதே என் கருத்து. சோற்றுக்காக உடலை விற்பதை காட்டிலும், அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெற்று, பின் பணத்திற்காகவும் அடுத்த படவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று விபசாரிப்பவர்கள் முன்னவர்களை விட கேடுகெட்டவர்கள்.
Post a Comment