Sep 1, 2005

எடுடா அருவாளை! போடுடா பெருமாளை!.

நான் கவிதை படிக்க ஆரம்பித்த சமயம்,எனக்கு இரண்டே வகைக் கவிதைகள் தான் தெரியும்.

முதல் வகை,

கண்ணே உன் கன்னம்
என்ன
கடலை மிட்டாயா?
இத்தனை தித்திப்பு!

இரண்டாவது வகை

தோழா
பொறுத்தது போதும்
எடுடா அருவாளை
போடுடா பெருமாளை.

சிறு பத்திரிக்கையை ஆரம்பித்த போது அதிர்ச்சி+ஆச்சரியம் கூடிக் கும்மாளம் அடித்தன.அந்த கவிதைகள் எனக்குப் புரியாமலே இருந்தன.இன்றும் பல கவிதைகள் எனக்குப் புரிவதில்லை.

மரபுக்கவிதை உடைக்கப்பட்டதே சாமானியனுக்கும் கவிதை புரிய வேண்டும் என்று தானே?
ஒரு கவிதை ஒவ்வொருவருக்கும் ஒரு படிமத்தைத் தரலாம்.அல்லது எல்லோருக்கும் ஒரே படிமத்தைத் தரலாம்.ஆனால் புரிய வேண்டும்.

படிமத்தை நுழைக்கிறேன்,பட்டாசு கிளப்பறேன் எனச் சொல்லும் புரியாத கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு குட்டிக் கவிதை.உங்களுக்கு உடன்பாடா எனச் சொல்லுங்கள்.

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.

5 எதிர் சப்தங்கள்:

Ganesh Gopalasubramanian said...

விஷயம் புரியுது. கொஞ்சம் "பகல் நேர"க் கவிதையாய் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் ;-)

நான் உடன்படுகிறேன் !!

நந்தன் | Nandhan said...

படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையே சிந்தனையில் வித்தியாசம் இருக்கும் வரை, எவ்வளவு தான் எளிமை படுத்தினாலும் எந்த கலையும் போய் சேராது என்பது என் அபிப்பராயம்

Nambi said...

:-)

வன்னியன் said...

எதில் உடன்பாடென்று கேட்கிறீர்கள்?
(இதே புரியவில்லை பிறகென்ன கவிதைப் புரிதல் என்று சிரிக்காதீர்கள்?)
எனக்குப் புரிகிறது ஒருவிதத்தில், இரசிக்கவும் முடிகிறது.

inomeno said...

/நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன./

understandable and nice.

/தோழா
பொறுத்தது போதும்
எடுடா அருவாளை
போடுடா பெருமாளை./

super :-)