Aug 21, 2005

இந்தியாவில் இலங்கைப் பிரச்சினை.

இந்தியாவில் இலங்கைப் பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பதாக தெரியவில்லை.அங்கு நடைபெறும் குண்டுவெடிப்பு மட்டுமே இங்குள்ளவரின் கவனம் பெறுகிறது.அதுவும் இங்கிலாந்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் பரபரப்பெல்லாம் கிடையாது.தினத்தந்தியில் அதுவும் ஒரு செய்தி.அவ்வளவே.

காரணம் என்னவாக இருக்கும் என யொசிக்கும் போது ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை.காஷ்மீர்ப் பிரிவினையினை பெரும்பாலான இந்தியர்கள் நிராகரிக்கிறார்கள்.அவ்ர்களின் ஆயுதம் ஏந்திய போராட்டம் இங்கு பலருக்கும் வெறுப்பினையே தருகிறது.

இங்குள்ளவர்கள்,இலங்கைப் போராட்டத்தினை,காஷ்மீர்ப் பிரிவினையுடன் ஒப்பிடக்கூடும்.இந்தியர்கள் இன்னும் காந்தியக்கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன்,இலங்கைப் பிரச்சினையினை ஒப்பிட முடியாது.இங்கு சுதந்திரப் போராட்டத்தில் இங்குள்ள மக்களின் ஆதரவு முழுமையாக போராளிகளுக்கு கிடைத்தது.இலங்கையில் ஆதரிக்கும் மக்களும்,எதிர்க்கும் மக்களும் ஒரே நாட்டில் வசிப்பது தான் பிரச்சினையே.

அன்னியனை வெளியேற்றிவிடலாம்.ஆனால் பிரிவினை என்பது சாதாரணமான செயல் அன்று.

ஆயுதம் இல்லாமல் போராடினால் அங்கு வெற்றி கிடைப்பதற்கான வழி இல்லையா?உலகின் கவனத்தையும் ஆதரவையும் இலங்கைத் தமிழர்களால் ஏன் இன்னும் பெற முடியவில்லை.பிரிவினை தான் ஒரே பதில் எனில்,அது எந்த வழியில் என்றால் என்ன?ஏன் மற்ற முறைகளை புலிகள் ஆதரிப்பதில்லை?எங்கேயோ வேண்டாம்,இந்தியாவில் அதுவும் தமிழ் மக்களிடம் ஆதரவினை பெறாமல் போகக் காரணம் என்ன?ராஜிவ் கொலை மட்டும் தான் காரணமா?வேறு ஏதேனும் காரணம் உண்டா?

உலகின் ஆதரவு இல்லாமல் ஒரு நாட்டினுள் பிரிவினை என்பது இயலக்கூடிய காரியமா?எனக்குள் மட்டும் ஆயிரம் கேள்விகள் உள்ளன.எனில் ஒட்டு மொத்தக் கேள்விகளின் எண்ணிக்கை?

20 எதிர் சப்தங்கள்:

Jigidi said...

//இங்குள்ளவர்கள்,இலங்கைப் போராட்டத்தினை,காஷ்மீர்ப் பிரிவினையுடன் ஒப்பிடக்கூடும்.இந்தியர்கள் இன்னும் காந்தியக்கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கலாம்//

இங்குள்ளவர்கள் யாருன்னு தெளிவு படுத்தினீங்கன்னா நல்லா இருக்கும்.
நேரம் கிடைத்தால் பாராவின் பாக்-பற்றிய புத்தகத்தை வாசிக்கவும்.

அது சரி,நுனிப்புல்லை மட்டும் விரும்பி மேயும் பசுவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

இப்போ தேவயானி மாசமா இருக்காங்களாம்.அதப்பத்தியாவது உருப்படியா எழுதுங்க...

Vaa.Manikandan said...

ஐயா,
நான் நுனிப்புல் தான்.உங்களைப் போன்று வேறோடு உண்போரின் கருத்தறியத் தான் இந்தப் பதிவு.தயவு செய்து விளக்கமாக எழுதுவீரோ?...இங்கு,என்பது இந்தியாவைக் குறிக்கும்.தேவயானி குறித்தும் அறிந்து கொள்வது தப்பானது ஒன்றும் இல்லை.

கொழுவி said...

இது பற்றிய வாதத்துக்குள் நான் வரவில்லை. ஆனால் இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கும் ஈழப்போராட்டத்துக்குமிடையிலான வித்தியாசமொன்றைச் சுட்டுகிறேன். இந்தியச்சுதந்திரப்போராட்டம், சிறுபான்மையான எதிரிக்கெதிரான பெரும்பான்மையானவரின் போராட்டம். இங்கு சுதேசிகளின் வேலைநிறுத்தப் போராட்டம்கூட நிர்வாகத்திற் பாரிய தாக்கத்தைத் தரும். எடுத்துக்காட்டு ஒத்துழையாமை இயக்கம்.

ஆனால் ஈழத்தில் நடப்பது, ஏறத்தாள 4 மடங்கு பெரும்பான்மையினருக்கெதிரான சிறுபான்மையினரின் போராட்டம். அகிம்சை எவ்வளவுக்குச் சாத்திமென்பது கேள்விக்குறி. மேலும் அகிம்சை வழிகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டுத்தான் இறுதிவடிவமாக ஆயுதப்போராட்டம் கிளைத்தது.
இந்தியச் சுதந்திரத்திலும் ஆயதப்போராட்டத்தின் கூறுகளுண்டு.

இவற்றைவிட இந்தியச்சுதந்திரப்போராட்டத்தையும் ஈழப்போராட்டத்தையும் ஒப்புநோக்கல் சரியன்று என்பதற்கு நிறையக் காரணங்களுண்டு.

Anonymous said...

Hi enjoyed my visit will be back.
joe

##keyword##

Anonymous said...

White Wings has a misscarriage.
Women rule Life. Men mere Sperm Donors. Is that true? Meeting the Ghost of Lady Ormsby at the ... I'm supposed to get fun out of working out, why they are not from their Blogs.
Hi, I was just checking out your blog! I love the way these work. I also have info on glendale child care center on mine. If you are interested, go see my glendale child care center related site. It isnt anything special but you may still find something of interest.

Anonymous said...

Kottke dumps Technorati for PubSub
Well know blogger Jason Kottke has said farewell and thank you for all the fish to Technorati in favour of PubSub.
Hello, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a prayers catholic blog. It pretty much covers prayers catholic related stuff.

Come and check it out if you get time :-)

Anonymous said...

Singing the Blog Electric: Podcast Your Way to Stardom
Please enter my order and I'll get 2 Risk-Free Issues of PC World plus 15 Instant Free Power Guides and Bonus Windows Tips CD-ROM. If I like PC World, I'll get 18 more issues for only $20. If not, I'll write ...
Hi, I stopped over at you blog, some great stuff you have there.

My site work at home careers may be of interest to you. Come over for a visit where you can learn a bit more about issues dealing with work at home careers.

Anonymous said...

You are making good job!
Keep up the super articles!

discount cialis

Anonymous said...

I like this delightful blog site. Enjoyed it.
This subject is worthwhile looking into, autoimmune disease
I hope you enjoy the subject autoimmune disease

Anonymous said...

I would just like to say hi and ask that you return the visit if you have the chance. Thank You!

The AdSense Guy

மு. மயூரன் said...

ஆயுதமேந்தாத விடுதலைப்போராட்டம் சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை.

காந்தியத்தை நம்புவதாக காட்டிக்கொள்ளும் பாரதத்தின் அரசியல் நகர்வுகளுக்காக, திலீபன் என்கிற ஒரு போராளியின் சாத்வீக உண்ணாவிரதப்போராட்டம் சாவில் முடிந்தது.
இந்தியா காந்தியாரின் முகத்தில் கரி பூசிய நிக்ழ்வு அது.

எனக்கு எப்போதும் காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை.

அது பயனற்ற வெறும் கருத்து.

நடைமுறையில், சாத்தியமில்லை.

காந்தியார்தான் தமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்று நம்பிக்கொண்டிருக்கும் இந்திய மக்களுக்கு என் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவ்வாறு சொல்வது வெள்ளைக்காரருக்கு அப்போது வசதியாயிருந்தது.

ஆஅளும் வர்க்கத்துக்கு இப்போது வசதியாயிருக்கிறது.

வலைஞன் said...

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காந்தியார் மட்டுமல்லதான். ஆயுதமேந்திப்போராடிய நேதாஜியின் வீரம் குறைவானதல்ல. ஆனால் காந்தியாரின் போராட்ட முறையின் வலிமை எந்த ஆயுதப் போராட்டங்களையும் விட வலிமையானது.

ஆயுதமேந்திய எதிரியை ஆயுதத்தால் வீழ்த்துவதைக் காட்டிலும் ஆயுதங்களால் அசுரத்தனமாகத் தாக்கினாலும் திருப்பித் தாக்காமலே அதே உறுதியுடன் முன்னேறிச்செல்ல அதிக மனவலிமை வேண்டும். எஃகு முனை கொண்ட குண்டாந்தடிகளால் அடிக்கப்பட்டு ரத்தம் வழியவழிய யாத்திரைகளிலும் சத்தியாக்கிரகங்களிலும் வன்முறைக்கு வன்முறை செய்யாமல் பங்கேற்ற ஆயிரமாயிரம் சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் மனத்திண்மை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? அவர்களை வழிநடத்தியதில் தான் காந்தியாரின் வெற்றி இருக்கிறது.

வலைஞன் said...

அதே சமயம் இன்று காந்தியம் என்றோ, சத்தியாக்கிரகம என்றோ சொல்லிக்கொண்டு எந்தப்போராட்டமும் வெற்றி பெற முடியாது. அதற்கான மனவலிமையும் பக்குவமும் இன்று எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண விஷயங்களிலேயே சத்தியாக்கிரகத்தின் பெயரைச் சொல்லி போலியாகப் போராடி அதன் மரியாதையையே நமது அரசியல் வாதிகள் கெடுத்துவிட்டார்கள்.

ஈழநாதன்(Eelanathan) said...

அனுராக் காந்தியின் சத்யாக்கிரகப் போராட்டத்தின் வெற்றி அவரது மனவலிமையில் மட்டும் தங்கியிருக்கவில்லை வெள்ளையர் அந்தப் போராட்டத்திற்குக் கொடுத்த மதிப்பிலும் சத்தியத்தை எதிர்கொள்வதற்கான வெள்ளை அதிகாரிகளின் பயத்திலும் கூடத் தங்கியிருந்தது.

இன்றொருவர் அதே அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்தால் யாராவது மதிப்பார்களா இல்லையா பயப்படுவார்களா இல்லையா என்பதிலே தான் போராட்டத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது.

ஈழத்தில் அன்னை பூபதி,திலீபன் இருவரும் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தது இந்தியாவுக்கெதிராக.இந்தியாவில் காந்தி உண்ணாவிரதமிருந்து வென்றது இங்கிலாந்துக்கு எதிராக.ஒருவேளை இந்தியாவுக்குப் பதிலாக இங்கிலாந்து அமைதிகாக்க வந்திருந்தால் இவர்களது உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கலாம்

மு. மயூரன் said...

காந்தியார் விசயத்தில் எப்போதும் என்னால் உடன்பட முடியாது.

இந்தியாவுக்கு போடப்பட்ட சுதந்திரம், போராட்டங்களுக்கு பயந்து அல்ல.
ஐக்கிய நாடுகள் சபையின் வருகையால், அமெரிக்காவுடைய புத்தெழுகையால், புதிய உலக ஒழுங்கால் ஏற்பட்ட பிரிட்டன் மீதான அழுத்தங்களால்.

காந்தியாரை கவுரவித்து கொடுத்துவிட்டு போவது இங்கிலாந்துக்கு வசதியாக இருந்திருக்கும்.

மற்ற போடாளிகள் எல்லோரும் கம்யூனிஸ்ட்டுக்களாச்சே?

ஆயுத புரட்சியை எந்த அதிகார வர்க்கம் ஏற்றுக்கொண்டுள்ளது?

காந்தியாரின் முயற்சி, உறுதி மீது எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்திய சுதந்திரம் அவரால் வாங்கிக்கொடுக்கப்பட்டதல்ல.

மாறாக ஹிட்லராலும், அமெரிக்காவாலும் கிடைத்தது

வலைஞன் said...

இந்திய சுதந்திரத்தை காந்தியார் வாங்கிக் கொடுக்க வில்லை. மாறாக சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதற்குத் தலைமை தாங்கியதால் அந்தப்பெருமை அவருக்குக் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்ததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

(ஒரு அணி விளையாட்டில் வெற்றி பெற பலர் காரணமாக இருந்திருப்பர். எதிராளிகளின் பலவீனம் கூட காரணமாக இருந்திருக்கலாம் தான். ஆனால் வெற்றிக்கோப்பை அணித்தலைவரிடம் தானே வழங்கப்படும்?)

//வெள்ளையர் அந்தப் போராட்டத்திற்குக் கொடுத்த மதிப்பிலும் சத்தியத்தை எதிர்கொள்வதற்கான வெள்ளை அதிகாரிகளின் பயத்திலும் கூடத் தங்கியிருந்தது.//
ஆனால் ஈழநாதன்,
ஜெனரல் டயரும், ஆஷ்துரை உள்ளிட்டவர்களும் கூட வெள்ளையர்கள் தானே? ஆட்சியாளர்களில் நல்லவர்களும் உண்டு. கொடுங்கோலர்களும் உண்டு. அது எந்தக்காலத்திற்கும் பொருந்தும். வெள்ளை அதிகாரிகளின் பயமென்பது அத்தனை தியாகிகளின் ஒட்டுமொத்த மனவலிமையை அவர்கள் அதற்குமுன் கண்டிராததுதான்.

//ஈழத்தில் அன்னை பூபதி, திலீபன் இருவரும் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தது இந்தியாவுக்கெதிராக.//

உண்மை! சத்தியாக்கிரகமே இன்று போலிப்போராட்டமாக மாறிவிட்ட சூழலில் அந்தத் தியாகிகளின் மனவலிமையை இந்திய ஆட்சியாளர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.

மணிகண்டன்:
தமிழக மக்களின் ஆதரவாலும் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தலாலும் அமைதிப்படையாக இலங்கை வந்த இந்திய ராணுவம் சிங்கள அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளால் ஈழத்தமிழர் விரோதப்படையாக மாறிப்போன வரலாறு துரதிருஷ்டவசமானது. இன்றும் இரு தரப்பிலும் இந்தப்பகை தொடர்வதும், ஈழத்தமிழர்கள் சிங்களர்களை வெறுப்பதைக்காட்டிலும் அதிக வன்மத்துடன் இந்தியாவை வெறுப்பதும்...ஒருவருக்கொருவர் நம்பிக்கையை இழந்துவிட்ட சூழலில் பகையும் வளர்ந்து கொண்டே செல்லும் நிலை. தமிழ்நாட்டிலும் அரசியல் நிலைப்பாடுகள் கூட்டணி விவகாரங்களால் ஈழத்தமிழர் ஆதரவு என்பது தொலைதூரப்புள்ளியாக மறைந்தே கிடக்கிறது.

மயூரன்,
//ஆனால் இந்திய சுதந்திரம் அவரால் வாங்கிக்கொடுக்கப்பட்டதல்ல.
மாறாக ஹிட்லராலும், அமெரிக்காவாலும் கிடைத்தது//
???????

Anonymous said...

Great Blog you have here Blogger. This post on "this post" is interesting. I've bookmarked your blog so I can come back latr and see how things are progressing.

Hey, I've got a site on work at home careers. If you're interested come have a look sometime.

Peace,
Bradford
http://bradfordmoore.com

Anonymous said...

This blog is very interesting. I've got a similar site about start work at home business.

Maybe you'd like to have a look some time...

Peace,
Bradford
www.BradfordMoore.Com

Satheesh said...

Devayani maasama illayaa sollungappaa!!

Anonymous said...

kushboo (athu) use panniyirunthaal avalukku eppadi kuzhanthai pirakkum.