Aug 10, 2005

ங்கோத்தா(நன்றி:சுஜாதா)

ங்கோத்தா,ங்கொம்மாளை போன்ற சொற்கள் அதற்கான விவகாரமான அர்த்தங்களை இழந்து வருவதாக எழுத்தாளர் சுஜாதா தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அந்தச் சொற்களை உபயோகப்படுத்த வேண்டும் என்னும் ஆசை இருந்தது.விலங்கினை உடைத்த சுஜாதாவுக்கு நன்றிகள்.

ங்கோத்தா!

ஆணியில் மாட்டப்பட்ட சட்டை அப்பாவுக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட குடை அம்மாவுக்கு
ஓரமாய் கிடக்கும் கைப்பை அக்காவுக்கு
அவரவரின் அடையாளங்களுடன்
சேர்ந்து கொண்டிருக்கிறது
ங்கோத்தா
என் இண்டர்வியூ ஃபைல்.

7 எதிர் சப்தங்கள்:

-/பெயரிலி. said...

தமிழ்ச்சிறுசஞ்சிகைகளிலே அதிகம் பழகிப்போன "பட்டியற்கவிதை" வகைத்தடத்திலேயிருப்பிலும், ங்கோத்தா! நல்ல உட்புகுவு.

Vaa.Manikandan said...

Thanks for your comment Peyarili.
what do you mean by "pattiyaRkavithai"?

குழலி / Kuzhali said...

டுபுக்கு என்று சொல்லி வீட்டில் சின்ன வயதில் அடிவாங்கினேன், இன்று திரைப்படங்களின் புண்ணியத்தில் டுபுக்கு ஒரு சாதாரண சொல்லாகிவிட்டது, அதே மாதிரி இதுவும் ஆகிவிடும் போலுள்ளது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இந்த வார்த்தை சரியில்லை நண்பா...

நாகரீகம் மீறுவதாய் படுகிறது எனக்கு

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Ganesh Gopalasubramanian said...

விஷயம் இதுதானா
புரியாம போச்சே

Jayaprakash Sampath said...

அட.. இவ்ளோ நேரம் கண்ல படாம பூட்சே... சூப்பரா கீது., மணிகண்டன்..

Vaa.Manikandan said...

நன்றி பிரகாஷ்,கணேஷ்.வீட்ல வார்த்தை அடக்கணும் குழலி.நாகரீகம் பற்றி ஒரு பதிவிட எண்ணம் ரசிகவ்.அப்போது உங்களுக்கு பதில் தருகிறேன்.