இந்த தேவயானி இருவருக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்.ஆனாலும் இவரின் அலம்பல் தாங்க முடியவில்லை.
விகடனில் ஒரு கேள்வி.தனிக்குடும்பத்திற்கும்,கூட்டுக்குடும்பத்திற்கும் வித்தியாசம்?தனிக்குடும்பம் புதுக்கவிதையாம்.கூட்டுக்குடும்பம் மரபுக்கவிதையாம்.சொன்னவர் புதிய அவ்வையார் தேவயானி.
ஏன் தேவயானிக்கு கவிதை தெரியக்கூடாதா என வினவுபவர்களுக்கு....
திரையிசைக்கவிஞர் விவேகாவின் "உயரங்களின் வேர்" நூல் வெளியீட்டு விழாவில் குத்துவிளக்கேற்றிய குத்துவிளக்கு தான் தேவயானி."உயிர்களின் வேர்" என்று கடைசி வரைக்கும் உயிர் பற்றி எல்லாம் சம்பந்தம் இல்லாமல் பேசி காமெடி செய்தததை படித்திருக்கலாம்/பார்த்திருக்கலாம்.யாராவது சென்னையில் அம்மையாரை பார்த்தால் கவிதை பற்றி எதாவது கேளுங்கள்.ராஜகுமாரன் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதே விகடனில் மக்களின் மனம் கவர்ந்த நடிகை,"விகடன் டெலிவிஸ்டாஸ்"ன் தேவயானி.மனம்கவர்ந்த தொடர் அவர்களின் "கோலங்கள்".இத்தனை நாள் கோலோச்சி வந்த ராதிகா மக்களால் அல்லது விகடனால்,மக்கள் மனதில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டார்.அப்படியா?
இங்கு வருகிறது குமுதம்.
எடு தேவயானியின் மாமியாரிடம் ஒரு பேட்டி.அவரை முறுக்கு சுட வைத்து ஒரு படம்."நியாயமா மருமகளே"னு ஒரு கவர் ஸ்டோரி.வாசகர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் தேவயானியின் மாமியாரின் நிலையை பாருங்கள் என ஒரு புலம்பல்.
உங்களை நம்பி தேடிப்பிடித்து(ஐதராபாத் கோட்டியில் தேடிப்பிடித்தால் தான் கிடைக்கும்) 8 ரூபாய் கொடுத்து வாங்கினால் நல்லா மிளகாய் அரைக்கிறீர்கள்.வளரட்டும் உங்கள் இலக்கியப்பணி.தொடரட்டும் எங்கள் இளிச்சவாயப்பணி.
Aug 7, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 எதிர் சப்தங்கள்:
A message a day keeps the blues away:-)
cherry cheesecake recipe You are welcome to visit.
ha haa!
//புரட்டப்படும் நடிகை தேவயானி
இந்த தேவயானி இருவருக்கு இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்//
என்னங்க மணி... இப்பல்லாம் ஒரு மாதிரியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க ;-)
appothaan niinga ellam variingga!
gnanam.:)
மயலே மயிலேன்னானாம் ஒருத்தன்..குயிலே குயிலேன்னு எதிர் கொரல் கொடுத்தானாம் அவன் பங்காளி.
Post a Comment