எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது!
ஆனால் வறண்டு கிடக்கிறது மனசு.(ஏற்கனவே வறண்டுதான் இருந்ததுனு யாருங்க சொல்றது?)
யாரோ CD யில் கவிதை நூல் வெளியிட்டுளார்களாமே?நல்ல முயற்சி.(ஆனந்த விகடன்)
"வித்தகக் கவிஞர்"(நன்றி:கலைஞர்)பா.விஜய் க்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"...ஒவ்வொரு என்று விளித்த பின்பு பூக்கள் என குறிக்கலாமா?அஃறிணை சொல்கிறதா? அல்லது சொல்கின்றன வா? குழப்பமாக இருக்கிறது.யாரேனும் விளக்குங்கள்.
எனக்கு இலக்கணம் தெரியாது.சிறு குழப்பம் அவ்வளவுதான்.மற்றபடி நக்கீரன் ஆகும் ஆசை எல்லாம் இல்லை.இன்னும் அந்தப் பாடலை முழுமையாக கவனியுங்கள்.
Jul 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
12 எதிர் சப்தங்கள்:
அன்பின் வா.மணிகண்டன்,
ஒவ்வொரு+பூ என்றுதான் வரவேண்டும். ஒவ்வொரு பூக்கள் என வராது. ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என இருப்பதுதான் சரி.
சரிசரி கண்டுக்காதீங்க.. கவிதைக்கு பொய் அழகு!!!
அது சரி....தேசிய விருது என்பது எல்லாம்?
மூர்த்தி சொன்னதுபோல் கவிதைக்கு பொய் அழகுதான்.
யோவ் மணிகண்டன்,
இதையெல்லாம் பெரிய விசயமா எடுக்காதீங்கோ.
குறிப்பா பாட்டுக்களுக்கு இந்த இலக்கணம் பாக்கிறதெல்லாம் எப்பவோ துலைஞ்சிட்டுது.
கண்ணதாசன் கூட (கூட என்பதை அழுத்திச் சொல்லவும்.) இப்படி வழுக்களோடு எழுதியிருக்கிறார். ஒன்றுமட்டும் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது.
"அன்புள்ள மான்விழியே, ஆரையில் ஓர் கடிதம்"
மெட்டுக்குப் பாட்டு என்று வந்தபின் இன்னும் இலக்கணவழுக்கள் வரச்சந்தர்ப்பமுண்டு.
ஏதோ பெரிய மனுஷா....ராமா வும் வசந்தனும் சொன்னால் சரி தான்.
//சரி கண்டுக்காதீங்க.. கவிதைக்கு பொய் அழகு//
அது சரி நீங்க சொல்றதுக்கும் கவிதைல பொய் வாரதுக்கும் இன்னா சம்பந்தம் இருக்கு.கவிதைக்குப் பொய் அளகுன்னு சொல்ரதெல்லாம் கவிதையோட அர்த்தத்துக்காக.
பொழப்பத்து ஒருத்தர் நாலு வரியில் ஒண்ணை எழுதுவாராம்.அதுக்கு இன்னொருத்தர் கமெண்ட்னு கன்ட கஸ்மாலத்தையும் எழுதுவாராம்.
பாவம், உங்களப் பார்த்தக் கூட்டத்தில தன்னோட அடையாளத்தை இழந்திடுவோமோன்னு பயப்படர விடலைப் பசங்க சும்மா வேணும்னே கூவிட்டு இருக்கரது தான் ஞாபகத்துக்கு வருது.
ஜிகிடி, நான் காணாமல் போனால் அதற்காக அழுது எல்லாம் புலம்ப போவதில்லை.இங்கு கேள்வி, ஒரு இலக்கணப்பிழையுடன் கூடிய பாடல் ஒன்று தேசிய விருது பெற்றிருப்பதே.தேவை இல்லாமல் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
//நான் காணாமல் போனால் அதற்காக அழுது எல்லாம் புலம்ப போவதில்லை//
நான் சொன்னது identity crisis வந்து தவிக்கிற விடலைப் பசங்கள.இந்த விடலைப் பசங்க தான் அவங்களப் பொண்ணுக முதற்கொண்டு எல்லாரும் பார்க்கணும்னு தேவையில்லாம பொது இடங்களில அலட்டலாக் கூவீட்டு இருப்பாங்க.என்னப்பூ,நேத்து அடிச்ச சரக்கோட மப்பு இன்னும் தெளியலையா???
//தேவை இல்லாமல் குழப்பிக் கொள்ள வேண்டாம்//
காமலை வந்தாப் பார்க்கரதெல்லாம் மஞ்சளாத் தெரியுமா.பாவம்...
//விடலைப் பசங்கள. தேவையில்லாம பொது இடங்களில அலட்டலாக் கூவீட்டு இருப்பாங்க
//
அண்ணாச்சி ஜிகிடி
எல்லார் பதிவிலேயும் போயி அசட்டு தனமா நீங்க கூவிக்கிட்டு இருக்கறதுக்கு பேரு என்னங்க ?
சிங்கபூர்ல சுதந்திர தினத்துக்கு மிட்டாய் கொடுத்தாங்களா ?
//ஒவ்வொரு+பூ என்றுதான் வரவேண்டும்.ஒவ்வொரு பூக்கள் என வராது. ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என இருப்பதுதான் சரி.சரி சரி கண்டுக்காதீங்க.. கவிதைக்கு பொய் அழகு!!!//
மணிகண்டனோட கருத்துப்படி இந்தப் பாட்டில் இலக்கணப்பிழை இருக்கு.அதை ஒத்தூதும் மூர்த்தி அந்தப் பிழை பற்றி சொன்னதோட நிறுத்தியிருக்கலாம்.
கவிதைக்குப் பொய் அழகுன்னு சொன்னது கவிதையின் நயத்தையும் அதில் வரும் உருவகங்கள்,பயன்படுத்தப் படும் சொற்கள் முதலியவற்றுக்குப் பொருந்தும்.
இலக்கணப்பிழை என்பது இதில் எந்த விதத்திலும் சேராத ஒன்று.பாவம்,கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டார் போலிருக்கு.
//சிங்கபூர்ல சுதந்திர தினத்துக்கு மிட்டாய் கொடுத்தாங்களா?//
சிங்கையில சுதந்திர நாளாம்.சின்சினாட்டியில பறக்கிறது வௌவ்வாலாம்.
மணிகண்டன், ஒரு முறை என் வலைப்பதிவில் தமிழ்நாட்டில் கவிதை ரசனை பற்றி புலம்பியிருந்தேன். அப்பொழுது நீங்கள் முன்னரே இது பற்றி எழுதி இருப்பதாக சொன்னீர்கள். இன்று தான் அது பற்றி படிக்க முடிந்தது. உங்கள் வலைப்பதிவில் எடுத்துக்காட்டப்படும் கவிதைகள் நன்று. ஆனால், அவை நீங்கள் எழுதியவையா வேறு ஒருவர் எழுதியதா என்று தெளிவாக சொல்லலாம். குறிப்பாக கீழே காணும் கவிதை மற்றும் அண்மையில் நீங்கள் போட்டுள்ள காலச்சுவடு கவிதைகள்,
நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன
அப்புறம், வாசகர்களை ஈர்க்க அப்பப்ப ஏடாகூட பதிவு போல நிதானமாக பதிவு போட்டீர்களானால் நீண்ட கால ரீதியில் பயன் இருக்கும் என்பது என் கருத்து..இல்லாவிட்டால் மணிகண்டன் என்றாலே ஏடாகூடம் தான் என்று ஒருமுறை வந்தவர்கள் திரும்ப வராமல் இருக்க நீறைய வாய்ப்புண்டு..தொடர்ந்து எழுதுங்கள்
//வாசகர்களை ஈர்க்க அப்பப்ப ஏடாகூட பதிவு போல // என்பதற்கு பதில் //வாசகர்களை ஈர்க்க அப்பப்ப ஏடாகூட பதிவு போடாமல் // என்று இருக்க வேண்டும்..அப்புறம், பா. விஜய் பாட்டு தவிர்த்திருக்க வேண்டிய இலக்கணப்பிழை தான். கவிதைக்கு பொய் அழகாக இருக்கலாம்..ஆனால் பிழை அழகு கிடையாது. இந்த பாட்டில் விருது கொடுக்கும் அளவுக்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பலராலும் இந்த மாதிரி அறிவுரைப் பாடல்களை எழுத முடியும். பா. விஜய் தெரிந்தே அந்த பிழையை செய்திருப்பார் என்று தான் தோன்றுகிறது..யாராவது கேட்டால், இலக்கணத்தை மாற்றுகிறேன் என்று சப்பைக்கட்டு கட்டக்கூடும். விருது கமிட்டி இப்பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து படித்து தான் விருது கொடுத்திருப்பார்கள். அவர்கள் பிழை கண்டு பிடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது..
Post a Comment