Apr 19, 2005

புறக்கணிப்பு!

Image hosted by Photobucket.com

நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்

அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின்
ஆழத்திலெழும்கேவல்
என

எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்
புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

நன்றி:திண்ணை.காம்

4 எதிர் சப்தங்கள்:

ilavanji said...

நல்லா இருக்கு மணி!

படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க!

Ganesh Gopalasubramanian said...

இது ஏற்கனவே "ஒரு கவிதை" என்னும் தலைப்பில் வெளி வந்து "பேசப்பட்ட" மாதிரி தெரியுதே

Wordsworthpoet said...

பின்னூட்டம் நெறய வரலேன்னா,
புறக்கணிப்பு-ன்னு ஏன் எடுத்துக்கறிங்க?

ழுதது போதும்...
ர்ப்பரித்து எழு மணிகண்டா...
னியொரு விதி செய்ய...

க்களும் பறக்கின்றனவே...
ன்னாலும் முடியும் தும்பீ !
க்கம் பெற தூக்கம் போடு...

முடியாவிட்டால் blog-ல கவிதை போடு !

Vaa.Manikandan said...

ஆமாம் கணேஷ்,வேறு கவிதையை போட்டிருக்க வேண்டும்,ஏதோ(யாரோ அல்ல) நினைவில் போட்டுவிட்டேன்.மன்னிக்க.
பொயட் வந்துடீங்களா?