தெரு நாய்கள்
விநோதமானவை.
குனிந்தொரு
கல் தொடும்வரையில்
குரைக்கின்றன.
கடித்தலேதுமின்றி
உறுமலுடன்
முடிந்துபோகும்
சண்டைகள்.
தலை சாய்த்து,
ஒடுங்கிய கண்களை
புவியில் புதைத்து
அலைகின்றன.
எச்சிலொழுகும்
நாவுடன்
யாரையாவது
நினைவுபடுத்துகின்றன.
ஏதொவொரு
வாகனச்சக்கரத்தில்
வீழும் வரை
அலைகின்றன.
திக்கற்று.
தெரு நாய்கள்
விநோதமானவை.
வா.மணிகண்டன்
Apr 2, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 எதிர் சப்தங்கள்:
நல்லாருக்குய்யா... தொடர்ந்து நல்ல நல்ல கவிதையா எழுதுங்கய்யா..
நல்ல வேளை...
எங்கே, இந்த ஆ.வி. SMS (சிரிப்பு..மாமூ...சிரிப்பு)- ல சொல்ற மாதிரி கடைசில, தெரு நாய் blog-படிக்கும்-னு முடிச்சுடுவீங்களோன்னு நா ரொம்ப பயந்து போயிட்டேன் மணிகண்டன்.
நல்லா இருக்கு மணிகண்டன்.
//எச்சிலொழுகும்
நாவுடன்
யாரையாவது
நினைவுபடுத்துகின்றன//
?! :)
அப்படீகுறீங்க? நன்றி மூர்த்தி
நல்ல ஐடியா வா இருக்கே wordsworthpoet
நன்றி இளவஞ்சி
தெருநாய்கள் விநோதமானவை
தன்னை ரசிப்பவனைக் கூட
கல் தொட வைக்கின்றனவே
கல்லிலும் கலைவண்ணம்
காண்பவர் அன்றோ மணிகண்டன்
நீர்! தொட்ட கல் இந்நேரம்
தெருநாய்க்கு கவிதை சொல்லிக்
கொண்டிருக்கும். அடுத்தமுறை
உமக்கு கல்லைத் தொடும்
கவலை இருக்காது.
அருமை! கவிக்குயில் கூவட்டும்
என்னங்க கணேஷ் என்ன வோ எல்லாம் பேசுறீங்க!
மிக நல்ல கவிதை மணிகண்டன். பாராட்டுகள்.
இதை நாங்க மரத்தடில 'சுணுக்கு'ன்னு சொல்லுவோம். விருப்பமிருந்தால் மரத்தடிக் குழுமத்தில் சேர அழைக்கிறேன்.
சுட்டி : http://groups.yahoo.com/group/maraththadi
அன்புடன்
சுந்தர்
ஆஹா !!! நல்லா இருக்கு பாஸ்
Post a Comment