சிறிது காலத்திற்க்கு முன்பு திரைப்படபாடலாசிரியரும்,கவிஞருமான(இரண்டிற்க்கும் சம்பந்தம் இல்லை தானே?) நா.முத்துக்குமாருடன் பேசிக்கொண்டிருந்த போது கலாப்ரியா என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார்.
எனக்கு அப்போது அந்தப்பெயர் மிக வித்தியாசமானதாகவும் ஒரு ஈர்ப்புத்தன்மையும் உடையதாக இருந்தது.அந்த கவிதைகளைப்பற்றி ஒன்றும் பெரிதாகநினைப்பு எதுவும் இருக்கவில்லை. நீண்ட நாட்க்களுக்குப்பின்னர் கலப்ப்ரியா வின் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அக்கவிதைகள் பெரும்பாலும் இறுக்கத்தை உண்டாக்குவதாகவும்,சில சமயத்தில் எனக்கு இறுக்கத்தை இளக்குவாதகவும் இருக்கிறது.
ஒரே ஒரு கலாப்ரியா கவிதையை பதிக்கிறேன்.
விதி
அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
Mar 30, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 எதிர் சப்தங்கள்:
எனக்கும் கலாப்பிரியா கவிதைகள் பிடிக்கும். கல்யான்ஜி கவிதைகளும் அப்ப்டியே!
தங்கமணி,
வண்ணதாசன்(கல்யாண்ஜி)ன் படைப்புகளையும் இணையத்தில் உலவ விடும் எண்ணம் இருக்கிறது.
நல்ல கவிதை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
கல்யாண்ஜியின் கவிதைகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
Post a Comment